பிற செயலிகளை வலுவிழக்கச் செய்கிறதா சியோமி – காரணம் என்ன?

இந்தியாவில் வலுவாக தடம்பதித்துள்ள சீன நிறுவனமான சியோமி மீது, தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புகார்கள் எழுந்தன. இதை எளிதில் கடந்து வந்த நிறுவனம் தற்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது, சியோமி தனது ஸ்மார்ட்போன்களில் app throttling செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான தரநிலையை பகுப்பாய்வு செய்யும் Geekbench நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் பூலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிக்கலில் சியோமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். … Read more

நம்ம ஊரு டாடாவின் புதிய 'Neu' சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் அபார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சாலையோர வியாபாரம் முதல் ஆடம்பர தொழில்கள் வரை தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது UPI பணப் பரிவர்த்தனை முறை என்று சொன்னால் அதற்கு மாற்றிக்கருத்து இருக்க முடியாது. ரூ.1-இல் தொடங்கி லட்சக்கணக்கிலான பணப் பரிவர்த்தனை வரை இந்த சேவை மூலம் பயனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதை உணர்ந்து கொண்ட உள்நாட்டின் மிகப்பெரும் மரியாதைக்குரிய நிறுவனமான ‘ Tata Group ‘ … Read more

ரூ.38,900-க்கு ஐபோன் 12 – ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு

இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர். இது தொடர்பான அறிவிப்பு இந்தியாவுக்கான ஆப்பிள் விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது. ஐபோன் 12 ஸ்டோரில் ரூ.38,900-க்கு சலுகை விலையில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழசுக்கு புதுசு) ஆஃபரில் இந்த விலை தள்ளுபடி கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் … Read more

உனக்கு நான் சளைச்சவன் இல்ல – 2 திட்டங்களை அறிமுகம் செய்த விஐ!

டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் ஒரு மாதம் முழுமையாக செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை அமல்படுத்தும்படி பணிக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில், முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், ஒரு மாதம் செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும், வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, … Read more

ஷாக் கொடுத்த வாட்ஸ்அப் – இதனால தான் உங்க கணக்கு முடக்கப்பட்டிருக்கு!

பயனர் பாதுகாப்பு, செயலி மேம்பாடு என மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பல புதுப்புது அம்சங்களை அவ்வப்போது பயனர்களுக்கு அளித்து வருகிறது. அதனுடன், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பயனர்கள் மீதும் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்தவகையில், Whatsapp இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும், சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர் கணக்குகளை முடக்கியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட … Read more

Frevolution எப்படி தொடங்குகிறது என்று பாருங்கள்! ரூ.15,000க்கும் கீழ் பல அம்சங்களுடன் வெளியான Samsung Galaxy F23 5G இந்த புரட்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது!

சாம்சங் இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று என்பது நமக்கு புதிய செய்தி அல்ல. பல ஆண்டுகளாக நிறுவனம் புரட்சிகர கேஜெட்களை நமக்களித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மிகப்பெரிய பாய்ச்சலை எடுக்க இவை உந்துசக்தியாக செயல்பட்டது. கடந்த வாரம் விற்பனைக்கு நிறுவனம் கொண்டுவந்த ஸ்மார்ட்போன் Gen-Z தலைமுறையை திரும்பி பார்க்க செய்துள்ளது! விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய Galaxy F23 5G ஸ்மார்ட்போனானது, Galaxy F சீரிஸில் முதன்முதலில் பல அம்சங்களை கொண்டிருக்கும் ஒரு ‘ Frevolution ‘ … Read more

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!

கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android பதிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் குறித்த தகவல்களும், வதந்திகளும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவல் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த வசதியை குறித்தது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பிரீமியம் மொபைல் போன்கள், eSIM வசதியை அளிக்கிறது. வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் தான், அனைத்து போன்களிலும் இருக்கும் … Read more

ஆண்ட்ராயடு 13-இல் புதிய அம்சம்: ஒரு eSIM-இல் பல கேரியர் இணைப்புகள்

உலகமே டிஜிட்டல் மயமாகியுள்ளது. எல்லோரும் கடல், மலை என பல எல்லைகளை கடந்து தொடர்பு கொள்ள உதவுகிறது தொழில்நுட்பம். அதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஸ்மார்ட்போன்கள். இத்தகைய சூழலில் சிம் கார்டுகள் இல்லாமல் இரண்டு விதமான நெட்வொர்க் இணைப்புகளை ஒரே இ-சிம்மில் பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 மூலம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MEP (மல்டிபிள் எனேபிள்ட் புரோஃபைல்ஸ்) என்ற அம்சத்தின் மூலம் இதை கூகுள் நிஜமாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமையை … Read more

இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை ஹேக் செய்த பெங்களூர் நபர்: ஏன் தெரியுமா?

பெங்களூரை சேர்ந்தவர் நந்தன் குமார். இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் வலைத்தளத்தை முடக்கியுள்ளார். அது ஏன் என்பதை அவரே தெரிவித்துள்ளார். இதை கேட்கவே மிகவும் விந்தையாக இருக்கலாம். சம்பவத்தன்று அவர் பாட்னாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அந்த பயணத்தில் அவர் தனது பையை கொண்டு சென்றுள்ளார். அதே விமானத்தில் மற்றொரு பயணியும் வந்துள்ளார். அவர்கள் இருவரது பைகளும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. பயணம் … Read more

18,999 ரூபாய்க்கு கிடைக்கும் சாம்சங் M33 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

இந்திய மொபைல் போன் சந்தையில் M33 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் மலிவான விலையில் 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில் M33 5G போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆக்டா-கோர் எக்ஸினோஸ் புராசஸர், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் … Read more