புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க அசத்தல் தள்ளுபடி…. இன்றே புக் பண்ணுங்க..!!

இந்திய சந்தையில்  ஹேட்ச்பேக்  ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில்  மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட்  மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது இந்நிலையில்,  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட்  கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.  புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் வாங்குபவருக்கு அதிகபட்சமாக ரூ.17,100 தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ரூ. 15,000 ரொக்க தள்ளுபடியுடன், ரூ. 2,100  என்ற அளவில் நிறுவனம் … Read more

Budget 2024: மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்…

Demands For Automobile Sector : 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெறும் நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதும், தொடர்ந்து மூன்றாவது முறையாக 7 சதவீதத்துக்கும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. … Read more

Budget 2024: ஸ்மார்போன்கள் விலை குறையுமா… எதிர்பார்ப்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை..!

Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக  ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம். நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வரவிருக்கும் பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மீதான் வரி குறைக்கப்படும் என்ற … Read more

மழை காலத்தில் இரு சக்கர வாகனம் பழுதாகாமல் இருக்க… செய்ய வேண்டியவை..!!

மழைக்காலம் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது. வாகனம் பழுதாகிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் வாட்டுவதோடு, வழுக்கும் சாலைகள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கிறது. இந்நிலையில், மழை காலத்தில், உங்கள் இரு சக்கர  வாகனத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும்,  பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.  டயர்கள் அளிக்கும் பாதுகாப்பான பயணம் இரு வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக இருக்க, டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரிப்பது மிகவும் … Read more

இன்ஸ்டாகிராமாக மாறும் வாட்ஸ்அப்! மொபைல் எண்ணை தெரிவிக்காமலேயே செய்தி அனுப்புவது எவ்வாறு?

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்வதேச தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது. தகவல் தொடர்பு சுலபமாக மாறியதில், வாட்ஸ்அப் செயலிக்கும் கணிசமான பங்கு உண்டு. முதலில் தகவல்களை சுருக்கமாக பகிர்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப், தற்போது வேலையையும் சுலபமாக்கிவிட்டது. வாட்ஸ்அப் பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய அறிவிப்பு,  வாட்ஸ்அப் செயலியும் இன்ஸ்டாகிராமில் உள்ள பல்வேறு வசதிகளையும் பெறலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை பயனர்களுக்குக் கொடுத்துள்ளது. இந்த புதிய … Read more

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. டேட்டா பயன்பாட்டில் இதுவரை இருந்துவந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து நம்பர் 1 ஆனது எப்படி? விரிவாக தெரிந்துக் கொள்வோம். தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டேட்டா … Read more

போன் திருடு போய்விட்டதா… அதில் பதிவாகியுள்ள UPI IDஐ நீக்குவது எப்படி..!

ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன் படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர ஸ்மார்ட் போனில் நமது முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள், வங்கித் தகவல்கள் ஆகியவை இருப்பதால், பாதுக்காப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை மறுக்க இயலாது.  இந்நிலையில், போன் திருடு போன நிலையில், அதில் பதிவாகியுள்ள உங்கள் UPI … Read more

நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்… தீயாய் பரவும் தகவல்… உண்மை என்ன..!!

மும்பையில் ஜாம்நகரில் ஆடம்பரமாக மூன்று நாள் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண விழா தான் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சமீபத்தில் நடந்த தனது இளைய மகன் ஆனந்தின் திருமண விழாவில், தனது சிறப்பான ஆடை அலங்காரம்  மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார். இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் … Read more

Bajaj CNG பைக்… ₹1200 EMI செலுத்தி வாங்கினால் பெட்ரோல் செலவும் மிச்சம்..!!

Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கை ப்யன்படுத்துவதால், தினசரி எரிபொருள் செலவு தோராயமாக 50% குறையும் என நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம், 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.75,000 சேமிக்கலாம் எனக் கூறுகிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விலையில் சுமார் ரூ.25 … Read more

அமேசான் பிரைம் டே சேல்…சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். அமேசானின் சலுகை விற்பனையில் பல விதமான பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு. சலுகை விற்பனை தினங்களில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் … Read more