இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!

உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட செயலியாக WhatsApp வலம் வருகிறது. இதை பயனர்கள் சொந்த தேவைக்காகவும், வேலை நிமித்தமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய சூழலில், பல முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப் தளம் வழி பகிரப்படுகிறது. பயனர்களின் தேவைக்கேற்ப பல மாற்றங்களையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு, அம்சங்கள் என Meta வாட்ஸ்அப் செயலியை பல கட்டங்களாக மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சில ஸ்மார்ட்போன்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 … Read more

தயாராகும் Xiaomi Pad 5 – குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம்!

இந்தியாவில் சியோமி நிறுவனம் அடுதடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Mi Pad 5 இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான பல உறுதிபடுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் கசிந்து வந்தது. தற்போது, புதிய டேப்லெட் வெளியீடு குறித்து Xiaomi India தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸ் செய்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியாவில் புதிய டேப்லெட் கணினியை சியோமி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது … Read more

LED டிவி விலை வெறும் ரூ.999 – பட்டன் போனை விட மலிவான டிவிக்கள்!

நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்க நினைக்கும் போது, உங்களின் பட்ஜெட் குறைவாக இருந்தால், அதை நினைத்து இனி கவலைப்பட தேவையில்லை. டெக் சந்தையில் ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல டிவிக்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart-இல் சில நல்ல பிராண்ட் டிவிக்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் 24″ இன்ச் HD Ready டிவிக்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், வங்கி கடன் அட்டைகளின் மீது சுலப மாதத் தவணை திட்டமும் … Read more

Smart Watch-ஆல் வந்த வினை – நபரை தூக்கிய இண்டர்நேஷனல் காவல் துறை!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு Smart Watch பயன்பாடு என்பது பொதுமக்களிடையே பெரிதும் அதிகரித்து காணப்படுகிறது. பல பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலம், உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை பயனர்களால் நிகழ் நேரத்திலேயே கணிக்க முடிகிறது. பல நேரங்களில் மரணம் நிகழாமலும் ஸ்மார்ட்வாட்சுகள் பல பேரை காப்பாற்றி இருக்கிறது. பெரும்பாலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நல்ல நோக்கத்துக்காகவே வெளி கொண்டுவரப்படுகிறது. ஆனால், இதனையும் பலர் தவறான வழிகளில் பயன்படுத்துவது உண்டு. அதுபோன்ற சம்பவம் தான், தற்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. … Read more

வாரத்துக்கு ரெண்டு – Samsung விரும்பிகளுக்கு ஜாக்பாட்!

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்தியாவில் வாரத்திற்கு இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இது சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைத்து செக்மெண்டிலும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருப்பதால், பயனர்களுக்கு அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப போன் வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் நிறுவனம் Samsung Galaxy A13 மற்றும் A23 Mid Range 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக சிறந்த Galaxy F23 5G ஸ்மார்ட்போனை இந்திய பயனர்களுக்காக விற்பனைக்குக் கொண்டு … Read more

சியோமியின் அடுத்த ஆட்டம் – Mi Mix Fold 2 குறித்து கசிந்த தகவல்கள்!

தென் கொரிய நிறுவனமான Samsung சமீபத்தில் Galaxy Z Flip 3 ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கி போன் தயாரிப்பு நிறுவனஙகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் ஒப்போ ஃபைண்ட் என் (OPPO Find N) ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் களமிறக்கிறது. எப்போதும் பிரம்மாண்டத்தை சந்தையில் அறிமுகம் செய்யும் Xiaomi நிறுவனத்திற்கு, இந்த வெளியீடுகள் ஒரு சவாலாகவே பார்க்கப்பட்டது. உடனடியாக சியோமி Foldable ஸ்மார்ட்போன் குறித்து வதந்திகள் கசியத் தொடங்கின. ஆனால், அதை மெய்ப்பிக்கும் … Read more

மலிவு விலை Oppo போன் – ஆர்டர் போட்டு ஆஃபரை பெற ரெடியா!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K10 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று (29 மார்ச் 2022) Oppo K10 ஸ்மார்ட்போன் Flipkart, Oppo ஆகிய தளங்களில் விற்பனைக்கு வருகிறது. ஒப்போவின் புதிய ஸ்மார்ட்போன் Redmi 10 போல சில அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

Jio அதிரடி – முதல் முறையாக ஒரு மாத திட்டம் அறிமுகம்!

நீங்கள் Jio வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். நீங்கள் ஜியோ பயனராக இல்லை என்றாலும், நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தைப் பார்த்த பிறகு அவசியம் உங்கள் நெட்வெர்க் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்படி அறிவுறுத்துவீர்கள். இந்தியாவின் நம்பர் 1 நெட்வெர்க்காக வலம் வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ரூ.259 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டமானது, ஒரு மாதன் முழுவதும் செல்லுபடியாகும் என்பது தான் கூடுதல் சிறப்பு. … Read more

எலான் மஸ்க் தொடங்கும் புதிய சோஷியல் மீடியா?

Tesla நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான Elon Musk , சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இப்போது எலான் மஸ்க் தனது சொந்த சோஷியல் மீடியா தளத்தை விரைவில் தொடங்குவார் என்று பேசப்படுகிறது. இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, எலான் மஸ்க் மிகப்பெரும் சமூக வலைத்தளமான ட்விட்டர் குறித்து அதிரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு … Read more

செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் … Read more