WhatsApp Account Ban: 16 லட்சம் பேர் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் கோடிக் கணக்கிலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில், விதிகளை மீறியதாக 16 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. பிற செயலிகளுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் தான் அரட்டை, அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வப்போது முடக்கி வருகிறது. வாட்ஸ்அப் தற்போது அதன் 11வது மாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் … Read more

இந்தியாவில் ஏப்ரலில் மட்டும் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

புது டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே இந்தியாவில் சுமார் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடைவிதித்துள்ளதாக மல்டி மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதனை மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மாதந்தோறும் பயனர் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வாட்ஸ்அப் தாக்கல் செய்து வருகிறது. பயனர்கள் கொடுக்கின்ற புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் கொள்கையை மீறும் பயனர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்கை வாட்ஸ்அப் தடை … Read more

Netflix Account: ஒரே நேரத்தில் லட்ச கணக்கிலான சந்தாதாரர்களுக்கு குட்பை சொன்ன நெட்பிளிக்ஸ்!

Netflix Account: இப்போதெல்லாம் பல பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையத் தொடரைப் பார்க்க தங்கள் மொபைலில் நெட்பிளிக்ஸ் வைத்திருக்கிறார்கள். இதில் கொடுக்கப்படும் வீடியோக்களும், தொடர்களும் உலகளவில் பிரபலமானவை. ஆனால், பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் சமீபத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை அதன் தளத்தில் இருந்து தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட Netflix கணக்குகளில் பொதுவான ஒன்று உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு சொந்தமானது. TikTok Re-Entry: இந்தியாவிற்குள் நுழையும் டிக்டாக்; அப்போ இனி … Read more

Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!

Recharge Price Hike: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் வோடபோன் ஐடியா, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளன. மூன்று நிறுவனங்களும் தங்கள் மொபைல் ரீசார்ஜ் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் மொபைல் ரீசார்ஜ் விலை 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. BSNL Recharge: ஜியோவை விரட்டியடிக்கும் பிஎஸ்என்எல்-இன் அதிரடி ரீசார்ஜ் திட்டங்கள்! செலவினங்கள் அதிகரித்து … Read more

YouTube Videos: சாதனை பட்டியலில் இந்தியா – 11 லட்சத்திற்கும் அதிகமான யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!

YouTube Videos: யூடியூப், கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வீடியோ பகிரும் தளமாகும். இந்த தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கிலான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானது. லட்சக் கணக்கிலான இந்திய பயனர்கள் இதில் வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர். மேலும், பல்லாயிர கணக்கிலான படைப்பாளிகள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். இருப்பினும், இப்போது யூடியூப் அதன் தளத்திலிருந்து 11 லட்சத்திற்கும் அதிகமான … Read more

Elon Musk Twitter: என்னையா திட்டுற… ஆத்திரத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட சவுக்கடி ட்வீட்!

Elon Musk Twitter: எலான் மஸ்க் தும்மினாலும் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார். அவரது ஒவ்வொரு ட்வீட்டுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், dogecoin உருவாக்கியவருக்கு ஒரு பதிலடி ட்விட்டை மஸ்க் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் ஹாட் டிரெண்டிங் ஆவதற்கு முக்கிய காரணம் டாஜ் காயினுக்கும், எலான் மஸ்கிற்கும் இருக்கும் தொடர்பு தான். டாஜ் காயினை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஜாக்சன் பால்மர் (Jackson Palmer) ஒரு ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Elon … Read more

WhatsApp Update: செய்தியை அனுப்பினாலும் திருத்த முடியும் – வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

WhatsApp Update: வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக நாளுக்கு நாள் சிறப்பான அம்சங்களைக் கொண்டு வருகிறது. செயலியின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் பட்டனை நிறுவனம் இப்போது சோதித்து வருகிறது. வாட்ஸ்அப்பில் தற்போது அனுப்பப்படும் செய்திகளை நீக்க முடியும். ஆனால், திருத்த முடியாது. இப்போது வரவிருக்கும் அம்சத்துடன், இனி எளிதாக அனுப்பிய செய்திகளை திருத்தலாம். TikTok Re-Entry: இந்தியாவிற்குள் நுழையும் டிக்டாக்; அப்போ இனி இன்ஸ்டா ரீல்ஸ் கதி! WABetaInfo வழங்கிய தகவலின்படி, செய்தி எதிர்வினை எமோஜிகளை (Quick … Read more

iPhone 13 Clone: வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ ஐபோனா?

iPhone Clone: சீனாவில் LeEco என்று அறியப்பட்டு, தற்போது Letv என்று பெயர் மாற்றம் கண்டுள்ள நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது அச்சு அசலாக ஐபோன் போன்ற வடிவமைப்புடன் இருப்பதால், சமூக வலைதளத்தில் இதன் புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகிறது. லி-எகோ பெயரில் ப்ளூடூத் ஹெட்போன்களை கடந்த வருடம் அறிமுகம் செய்த நிறுவனம், அப்படியே காணாமல் போனது. தற்போது புதிய தோற்றத்தில் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2017ஆம் வருடம், LePro 3 AI போனை … Read more

TikTok Re-Entry: இந்தியாவிற்குள் நுழையும் டிக்டாக்; அப்போ இனி இன்ஸ்டா ரீல்ஸ் கதி!

TikTok Re-Entry: சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக், நாட்டின் தகவல் பாதுகாப்புக் காரணங்களுக்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இதனுடன் UC பிரவுசர், ஷீன் என 58 செயலிகளுக்கு தடை விதித்தது ஒன்றிய அரசு. டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும், அதன் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Free JioFi Router: புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான் – … Read more

Realme GT Neo 3T: ரியல்மி ஜிடி நியோ 3டி அறிமுக தேதி, எதிர்பார்ப்பு விலை மற்றும் அம்சங்கள்!

Realme GT Neo 3T: ரியல்மி நிறுவனம் தனது புதிய டி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன், ஜூலை 7 ஆம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் பதிவை, தனது ட்விட்டர் பக்கத்தில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. தற்போது NTBC, BIS, 3C சான்றிதழ் பதிவினை ரியல்மி ஜிடி நியோ 3டி வெற்றிகரமாக … Read more