iQOO Neo 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் iQOO. இந்த நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது Neo 6 ஸ்மார்ட்போன். இந்தியாவில் அறிமுகமாகி உள்ள முதல் Neo சீரிஸ் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேம் விளையாட இந்த போன் சிறப்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் … Read more

Free JioFi Router: புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான் – வைஃபை ரவுட்டர் இலவசமாம்!

Free JioFi Router: ரிலையன்ஸ் ஜியோ , நாட்டில் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இலவச ஜியோஃபை ரவுட்டருடன் மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. வணிக பயன்பாட்டை கருத்திற்கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பல நன்மைகள் வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டாவை பயனர்கள் எந்த இடத்தில் இருந்தும் அனுபவிக்க முடியும். Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்! ஜியோ அறிவித்துள்ள இலவச JioFi Router … Read more

Metaverse Rape: தொடாமல் இப்படி செய்ய முடியுமா; மெட்டாவெர்ஸில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

Metaverse Rape: டெக் துறை அதீத வளர்ச்சி கண்டு வரும் வேளையில், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் அதனை ஒரு படி மேலே இழுத்துச் சென்றுள்ளது. தற்போது, இந்த மெய்நிகர் உலகில் 21 வயதே ஆன பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எனும் தனிமனிதனின் கனவுத் திட்டமாக மெட்டாவெர்ஸ் பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய அனுபவத்தை வழங்கும் இந்த மெய்நிகர் உலகில் தொடர்ந்து பல சம்பவங்களும் அரங்கேறுகிறது. உண்மையான … Read more

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைந்த பேட்டரி: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி

புதுடெல்லி: மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக் கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட … Read more

இந்தியாவில் கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்த ஜியோ | விலை and அம்சங்கள்

மும்பை: இந்தியாவில் கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனை அனைத்து விதமான டிஜிட்டல் டிவைஸ்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் துறையில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம் மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், முதல்முறையாக கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் இன்னும் … Read more

Telegram: நானும் வர்றேன்; நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோவை போன்று டெலிகிராமிலும் மாத சந்தா!

Telegram: உலகின் பிரபல செய்தி பகிரும் தளங்களில் ஒன்றாக டெலிகிராம் இருந்து வருகிறது. கோடிக்கணக்கிலான பயனர்கள் இந்த செயலியை நித்தம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், டெலிகிராம் நிறுவனம் புதிய பிரீமியம் அம்சத்தை சோதனை செய்துவருகிறது. டெலிகிராம் சமீபத்தில் விளம்பரங்களை நிர்வகிக்கும் பகுதியை உருவாக்கியது. அதனடிப்படையில், தற்போது நிறுவனம் புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. புதிய பிரீமியம் சேவை அறிமுகமானால் பயனர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பயப்பட வேண்டாம்; அனைவரும் கட்டணம் … Read more

Reliance Jio: யாரும் தொடாத உச்சத்தை தொட்ட ஜியோ; இனி யாராலயும் அசைக்க முடியாது!

Reliance Jio: நாட்டின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ , தொடர்ந்து தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலையேறும் யாத்ரீகர்களுக்கு, தனது நெட்வொர்க் சிக்னல் கிடைக்க ஜியோ வழிவகை செய்துள்ளது. பத்ரிநாத்-கேதார்நாத் மந்திர் சமிதியின் தலைவர் அஜேந்திர அஜய் கேதார்நாத் மலையேற்ற பாதையில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் மற்றும் டேட்டா சேவைகளை தொடங்கி வைத்தார். JioPhone Next: மிகப்பெரும் தள்ளுபடி விலையில் ஜியோ 4ஜி போன் – விலைய பாத்து ஷாக் ஆகிடாதீங்க! … Read more

குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

அகமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சலை டெலிவரி செய்து அசத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை. இது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் புஜ் (Bhuj) தாலுகாவில் உள்ள ஹபே (Habay) கிராமத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்களை அனுப்பி உள்ளது இந்திய அஞ்சல் துறை. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 46 கிலோ மீட்டர் … Read more

Russia Ukraine News: கூகுள் உள்பட 7 டெக் நிறுவனங்களுக்கு அபராதம் – ரஷ்யா செஞ்ச காரியத்த பாருங்க!

Russia Ukraine News: தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் ஊடகங்களின் மேற்பார்வைக்கான ரஷ்யாவின் ஃபெடரல் சர்வீஸ் ( Roskomnadzor ), கூகுள் (Google), ஏர்பிஎன்பி (Airbnb), பீண்டெரஸ்ட் (Pinterest), லைக்மீ (Likeme), ட்விட்ச் (Twitch), ஆப்பிள் (Apple), யுனெடெட் பார்சல் செர்வீஸ் (United Parcel Service Inc) உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. தனிப்பட்ட தரவு சட்டங்களை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு தரவுத்தளத்தில், … Read more

Vivo V25 Pro 5G: அல்டிமேட் விவோ போன் விரைவில் – விலைய மட்டும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க!

Vivo V25 Pro 5G: உங்களின் போன் வாங்கும் எண்ணத்தை சிறிது நாள்கள் கிடப்பில் போட்டால், வெளியாகத் தயாராக இருக்கும் புதிய விவோ வி25 ப்ரோ 5ஜி போனை நீங்கள் வாங்கலாம். கிடைத்த தகவல்களின்படி விவோ வி25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் வரலாம். நிறுவனம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் IMEI தரவுத்தளம் மற்றும் யூரேசியன் எகனாமிக் கமிஷன் (EEC) சான்றிதழ் பட்டியல் உள்பட பல பதிவு தளங்களில் இந்த … Read more