Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!

Apple Event நிகழ்வை உலகளவில் உள்ள ஆப்பிள் விரும்பிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 8) இந்த நிகழ்வு இணைய நேரலை வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், பல ஆப்பிள் தயாரிப்புகள் வெளியிடப்பட்டது. அந்தவகையில், ஸ்மார்ட்போன் கேட்டகிரியைப் பொருத்தவரை, iPhone SE 2022 மாடலும், iPhone 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ கிரீன் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போன், குறைந்த விலையில் அறிமுகமானது. பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை … Read more

அவ்ளோ அழகுங்க இந்த SAMSUNG 5G போன் – ஸ்பெக்கும் டாப் டக்கர்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தனது எஸ் ரக பிளாக்‌ஷிப் தொகுப்பான சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் டேப்லெட்டுகளையும் அறிமுகம் செய்தது. முன்பெல்லாம் பயனர்களை சோதிக்கும் வகையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இருக்கும். ஆனால், தற்போது சீன நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில், அதிக தரத்துடன் இந்திய டெக் சந்தைக்குக் … Read more

ஆப்பிள் ஈவன்ட் மார்ச் 2022: லீக்கான லிஸ்ட்!

ஆப்பிள் தயாரிப்புகள் வெளியிடும் நிகழ்வான ‘ apple event ‘ இன்று மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இணைய நேரலை வாயிலாக இந்த நிகழ்வு உலகளவில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்கிறது. தற்போது அந்த தயாரிப்புகள் எவை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஆப்பிள் ஐபோன் விரும்பிகளின் வெகு நாள் காத்திருப்பாக இருந்த iPhone SE 3, பச்சை நிற Green iPhone 13 … Read more

Firefox அப்டேட் பண்ணுங்க – சிக்கல் இருப்பதாகக் கூறும் மொசில்லா!

பாதுகாப்பான உலாவி என்று பெயர் எடுத்த மொசில்லா நிறுவனத்தின் Firefox, ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் பிரவுசராகும். தனிப்பட்ட நிறுவனம் சாராத டெவலப்பர்கள் இதனை புதுப்பித்துக் கொண்டு வருவர். எந்தவித தரவுகளை பெரிதாக இந்த பிரவுசர் சேகரிப்பதில்லை. தனியுரிமை தகவல்கள் குறித்த புரிதல் இருக்கும் பெருவாரியான பயனர்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரையே அதிகம் விரும்புகின்றனர். நானும் இதே பிரவுசரை தான் பிரதானமாகப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பாதுகாப்பான புரவுசர் தனிப்பட்ட விருப்பத்திற்காக மட்டும் இது பாதுகாப்பான … Read more

WhatsApp புதிய அப்டேட்: புதிய Poll அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டம்!

மெட்டா தலைமையின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் புதிய ‘Poll’ அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் வசதிக்காக நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு, பயன்பாடு என அனைத்திலும் நிறுவனம் கவனம் செலுத்தி அப்டேட்டுகளை அளித்து வருகிறது. தனியுரிமை கொள்கை மாற்றம் செய்யப்பட்டபோது, இந்த செயலியின் பயனர்கள் பலர், வாட்ஸ்அப்பை விட்டு விலகி, டெலிகிராம், சிக்னல் போன்ற பயன்பாடுகளுக்கு தாவினர். இதனை சரிசெய்யும் விதமாக, நிறுவனம் தற்போது பயனர் பயன்பாட்டுக்கென அதிரடி அம்சங்களை அறிவித்து வருவது … Read more

சார்பில்லாத சம உரிமையே இவர்களின் விடுதலை – பெண்கள் தினத்தைக் கொண்டாடும் Google டூடுல்!

உலக மகளிர் தினம் 1911, ‘International Women’s Day’ மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். 1908களில் நியூயார்க்கில் பணிச்சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் பிப்-28, 1909 ஆம் ஆண்டு … Read more

Russia Ukraine War: இன்டர்நெட் கட்; டிக்டாக் குளோஸ் – ரஷ்ய நடவடிக்கையால் அதிருப்தி!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போரைத் தொடுத்தது. இதில் உக்ரைனின் பல இடங்கள் ராக்கெட் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டன. பல லட்சக் கணக்கிலான பூர்வகுடிகள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய சட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் ‘போலி செய்தி சட்டம்’. இந்த ‘ Fake News Law ‘ சட்டத்தைக் கொண்டு … Read more

இப்படி ஒரு Asus போனா – Flipkart-இல் இன்று முதல் விற்பனை ஆரம்பம்!

Flipkart தளத்தில் Asus 8z ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 7) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு, அதாவது ரூ.2,150 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.14,800 வரை பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்தி, பவர்புல் ஆசஸ் 8 … Read more

11ஜிபி வரை டர்போ ரேம் – விற்பனைக்கு வந்த Poco M4 Pro ஸ்மார்ட்போன்!

சியோமியின் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட், மூன்று லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் களம்கண்டுள்ளது. இதன் விற்பனை இன்று முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் தொடங்கியுள்ளது. சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி … Read more

Free Fire MAX redeem code: அதிரடி கேமின் அதிரவைக்கும் சலுகைகள்!

தினமும் கரீனா பிரீ பையர் மேக்ஸ் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (மார்ச் 7) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் … Read more