Moto குடும்பத்தின் G22 ஸ்மார்ட்போன் வெளியீடு – பயனர்களை கவரும் புதிய டிசைன்; 4 ரியர் கேமரா!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன மோட்டோரோலா நிறுவனம், புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டோரோலா ஜி22 ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் கேமரா, 5000mAh பேட்டரி திறன், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியன சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி22 அம்சங்கள் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் 6.5″ … Read more

Flipkart Offer – மலிவு விலையில் Apple iPhone வாங்க நல்ல வாய்ப்பு!

Flipkart ஷாப்பிங் தளம் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து மலிவு விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். தற்போது ஐபோன் மீது அதிரடி சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. புதிய சலுகையாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 5ஜி போன் வெறும் ரூ.32,699க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில் Apple iPhone 12 Mini ஸ்மார்ட்போனை … Read more

Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல் – நேரலையில் காண வாய்ப்பு!

ஆப்பிள் தயாரிப்புகள் மீது ஆர்வம் கொண்ட விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘ apple march event 2022 ‘ மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இணைய நேரலை வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில், ஆப்பிள் நிறுவனம் தங்களின் புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது. பசிபிக் ஸ்டாண்டேர்டு நேரப்படி, காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் இதற்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் நுழைந்து ஆப்பிள் நிகழ்வை நேரலையில் … Read more

ரஷ்யா மீது நடவடிக்கை எடுங்கள் – டெக் ஜாம்பவான்களிடம் கோரிக்கை வைத்த உக்ரைன்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா முன்னறிவிப்பு இன்றி போர் தொடுத்தது. உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. லட்சக்கணக்கிலான நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். பல நாடுகளிடம் உதவுமாறு கோரிக்கை வைத்தும் உக்ரைனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இச்சூழலில், உக்ரைனுக்கு இண்டர்நெட் சேவை வழங்கப்போவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் சேட்டிலைட் பிராட்பேண்ட் சேவை நிறுவனம் அறிவித்தது. கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த … Read more

Flipkart Sale: மக்களே; வெறும் ரூ.4,199க்கு சாம்சங் 5ஜி போன் – இந்த வாய்ப்ப நழுவ விட்றாதீங்க!

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் அதிரடி சலுகைகளை மொபைன் போன்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து மலிவு விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன் வெறும் ரூ.4,199க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில் Samsung Galaxy A22 5G ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளுங்கள். பெரும் … Read more

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் 'Nothing' டீஸர்!

ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் பெய், தனியாக வந்து ‘Nothing’ எனும் புதிய டெக் பிராண்டைத் தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பாக நத்திங் இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸ், உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தோற்றம், நேர்த்தியான அம்சங்கள் கொண்டு இந்த இயர்பட்ஸ் களமிறக்கப்பட்டது. இயர்பட்ஸின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி, கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருந்தது நத்திய இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸின் கூடுதல் சிறப்பு. டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் … Read more

டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஆசஸ் நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இச்சூழலில், நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் OLED டிவிக்களை அறிமுகம் செய்கிறது. மார்ச் 3ஆம் தேதி இந்த டிவி வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. #WhoWatchesTV #WowTheWorld போன்ற ஹேஷ்டேக்குகளைக் கொண்டு ஆசஸ் நிறுவனம் தனது புது படைப்புகளை விளம்பரப்படுத்தி வருகிறது. மக்கள் சிஆர்டி தொலைக்காட்சி பெட்டிகளில் இருந்து LCD டிவிக்களுக்கு மேம்படுத்திக் கொண்டனர். … Read more

Whatsapp பயனர்களே உஷார் – சுமார் 18 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா!

பயனர் மேம்பாடு, அவர்களின் பாதுகாப்பு என மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பல புதுப்புது அம்சங்களை அவ்வப்போது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதனுடன், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பயனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்தவகையில், Whatsapp இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும், சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட … Read more

Poco X4 Pro போன் இருக்க வேற என்ன வேணும் – MWC 2022 நிகழ்வில் வெளியீடு!

சியோமி நிறுவனத்திடம் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக மாறிய போக்கோ, தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பார்சிலோனாவில் நடக்கும் உலகின் பெரிய MWC 2022 நிகழ்வில், Poco X4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ சார்ஜிங் ஆதரவு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது. போக்கோ எக்ஸ் … Read more

புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா – இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் ஆப்பிள்!

இந்தியாவில் Apple நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வை, அதன் விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வெளியாகும் ஆப்பிள் தகவல் சாதனங்கள் குறித்த தகவல்கள் அவ்வபோது கசிந்தவன்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது ஆப்பிள் iPhone SE விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,000க்கு இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத … Read more