‘‘போலி கணக்குகள்; ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது’’- ட்விட்டர் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை
நியூயார்க்: 5 சதவீத போலி, ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை ட்விட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. … Read more