Vivo T1 Pro: விற்பனைக்கு வந்த விவோ டி1 ப்ரோ 5ஜி போன்!

Vivo நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. Vivo T1 Pro 5G, Vivo T1 44W ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. Vivo T1 Pro 5G ஆனது திறன்வாய்ந்த Qualcomm Snapdragon 778G செயலி, 66W டர்போ பிளாஷ் சார்ஜ் ஆதரவு, மூன்று பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன்களின் ஆரம்ப விலை ரூ.15,000க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், விவோ டி1 … Read more

NordVPN: கடையை காலி செய்யும் நார்ட் விபிஎன்!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், கடந்த வாரம் VPN நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இத்துறையில் பிரபலமாக விளங்கி வரும் நார்ட் விபிஎன் நிறுவனம் தங்கள் சர்வெர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த புதிய தொழில்நுட்பச் சட்டம், இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, இதுபோன்ற விபிஎன் நிறுவனங்கள் பயனர் தரவுகளை 5 ஆண்டுகள் வரை சேமிக்க … Read more

WhatsApp Update: அட்மினுக்கு அதிகாரம்; பெரிய பைல்கள் – பலே அம்சங்களை வெளியிட்ட வாட்ஸ்அப்!

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலிக்கு புதிய அப்டேட்டுகளை தொடர்ந்து அளித்து வருகிறது. பயனர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த அப்டேட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் பல பரிமாணங்களில் செயல்படும் நிலையை உருவாக்கி, பயனர்களை ஈர்க்கும் வகையில் திட்டங்களை நிறுவனம் வருகிறது. தற்போது புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட்டில், அரட்டையில் சாட்டுகளுக்கு எமோஜி மூலம் மறுபதிவு, குழுக்களில் கூடுதலாக நபர்களை இணைப்பது, 2GB வரையிலான பெரிய ஃபைல்களை அனுப்பும் வசதி என சூப்பர் அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. … Read more

RBI: இனி இந்த பேமெண்டுகளை ஆப்பிள் அனுமதிக்காது – அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் ( RBI ) புதிய ஆட்டோ டெபிட் விதிகளின் விளைவாக, இந்தியாவில் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தி செயலிகளை வாங்குதல்கள் மற்றும் சந்தாக்களுக்கான கட்டணங்கள் செலுத்தும் முறைக்கு நிறுவனம் தடை விதித்துள்ளது. புதிய விதிகள் ஏற்கனவே தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை சீர்குலைத்துள்ளதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்பிளின் புதிய நடைமுறைப்படி, இந்திய பயனர்கள் அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, App Store-இல் இருந்து செயலிகளை வாங்க முடியாது. … Read more

ஏன் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் 25K கீழ் சிறந்ததாக உள்ளது: சிறந்த 108MP கேமரா, கவர்ந்திழுக்கும் டிஸ்ப்ளே என இன்னும் பல!

இன்றைய காலகட்டத்தில் ‘Flexible’, ‘Multitasking’, ‘Dynamic’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. நடைமுறைகள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத சக்திகளை வழங்கும் காலத்தில் நாம் தற்போது வாழ்கிறோம். இங்குதான் எங்களில் கேட்ஜெட்டுகளின் தேவைத் தொடங்குகிறது. மேலும், சேவையைக் குறித்து பார்க்கும் போது, Samsung நிறுவனம் தனது பழைய ஸ்மார்ட்போன்கள் வாயிலாக பயனர்களுக்கு அதை புரிய வைத்துள்ளது. அதிக சக்தி கொண்ட பேட்டரி, திறன்வாய்ந்த புராசஸர்கள், வாழ்வியலை பிரதிபலிக்கும் சிறந்த கேமராக்கள் என அனைத்திலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தி … Read more

ஆன்லைன் ஷாப்பிங் முதல் வங்கி கணக்குகள் வரை: ஹேக்கர்கள் ‘உஷார்’

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையப் பயன்பாடு எந்த அளவிற்கு அதன் பயனர்களுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்து வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகிறது. மின்னஞ்சல் (இ-மெயில்) தொடங்கி சமூக வலைதள கணக்குகள் வரை அனைத்திற்கும் பாஸ்வேர்டு இருப்பதால் தகுந்த பாதுகாப்பு உள்ளது. இருந்தாலும் சமயங்களில் இணையப் பயனர்களின் சிறியதொரு கவனக் குறைவால் அவர்களது தனி நபர் விவரங்கள் தொடங்கி வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை ஹேக்கர்கள் சேகரிக்கும் அபாயம் உண்டு. அதன்மூலம் … Read more

Facebook Reels: கிரியேட்டர்களுக்கு ஜாக்பாட் – மாதம் ரூ.3 லட்சம் வரை பேஸ்புக் ரீல்ஸில் சம்பாதிக்கலாம்!

Meta-வின் கீழ் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனம், தனது தளத்தை தொடர்ந்து மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. டிக்டாக் நிறுவனத்தின் இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பேஸ்புக் தளத்தில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது. சமீபத்தில், இன்ஸ்டாகிராம் – பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களின் கன்டெண்டுகளும் இணைக்கப்பட்டு பயனர் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. அதாவது, பேஸ்புக் தளத்தில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பயனர்கள் பார்க்க முடியும். இதேபோல, பேஸ்புக்கிலும் ரீல்ஸ் அம்சத்தை மெட்டா நிறுவி தற்போது … Read more

எமோஜி ரியாக்‌ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர்… – புதிய அம்சங்களை ரோல்-அவுட் செய்த வாட்ஸ்அப்

கலிபோர்னியா: எமோஜி ரியாக்‌ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர் போன்ற புதிய அம்சங்களை பயனர்களுக்காக ரோல்-அவுட் செய்துள்ளது வாட்ஸ்அப். இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் … Read more

Moto Edge 30 Leaks: ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளியாகும் மோட்டோ பிரீமியம் பட்ஜெட் போன்!

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை பயனர்களுக்கு வழங்குவதில் மோட்டோரோலா நிறுவனம் தனித்துவமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிறுவனம் புதிய பிரீமியம் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. Motorola Edge 30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. மே 12 ஆம் தேதி இதன் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் ரூ.36,000 விலையில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் இந்திய பதிப்பின் விலையும், ரூ.30,000க்கும் மேல் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக Motorola நிறுவனம் … Read more

ரூ.15,000க்குள் Voice focus, 120Hz டிஸ்ப்ளே, Snapdragon 750G, RAM Plus போன்ற அம்சங்கள் கொண்ட Samsung Galaxy F23 5G போன் அதிரடி சலுகை விலையில்!

Samsung சமீபத்தில் Galaxy F23 5G ஸ்மார்ட்போனை பல முன்னணி அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது. Gen-Z தலைமுறையினருக்கு சரியான துணையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை Flipkart Big Savings Day விற்பனையின் போது அதிக தள்ளுபடி விலையில் வாங்கலாம். Galaxy F Series ஸ்மார்ட்போன்களில், முதல்முறையாக Qualcomm Snapdragon 750G, Voice Focus, PowerCool Tech போன்ற முக்கிய அம்சங்கள் Gen-Z தலைமுறையினரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாகும். பொறுங்கள்… உங்களுக்காக … Read more