Truth Social: வாய்ப்பில்ல ராஜா – ட்விட்டர் பக்கம் எல்லாம் இனி வர முடியாது!

முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், புதிய சோஷியல் மீடியாவைத் தொடங்கினார். அதிபராக இருந்த சமயத்தில் ட்விட்டர் இவரது பதிவுகளுக்கு தடை விதித்த விரக்தியில், தனது புதிய Truth Social ஆப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். சில மாதங்களுக்கு முன் ட்ரூத் சோஷியல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்ரம்ப் வெளியிட்டார். வெளியிட்ட சில நாள்களில் இந்த செயலியை பெரும்பாலான மக்கள் பதிவிறக்கம் செய்தனர். இந்த சூழலில், டிரம்பின் ட்ரூத் … Read more

'பேச்சு சுதந்திரம் என்பது?' – விளக்கம் கொடுத்துள்ள எலான் மஸ்க்

டெக்சாஸ்: ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குகிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க். இந்நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென்பது குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க். அந்த செய்தி உறுதியானது முதல் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர் மனித உரிமை … Read more

இனி சுதந்திரமாகப் பேசலாம் – ட்விட்டர் கடந்து வந்த பாதை!

டெக் சந்தையில், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது தான் இப்போது ஹாட் டிரெண்ட். முதலில் 9.2% விழுக்காடு பங்குகளை வாங்கிய மஸ்க், ஏப்ரல் 25 அன்று ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக விலை பேசி முடித்தார். இது டெக் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பேச்சு சுதந்திரத்தை ட்விட்டர் தடுக்கிறது என்று கடந்த சில மாதங்களாக நிறுவனத்தை வம்பிழுத்து வந்த மஸ்க், திடீரென அந்த நிறுவனத்தையே வாங்கியது தான் டெக் டவுனில் பேசுபொருளாகி உள்ளது. எனினும், … Read more

ஆன்லைன் வழியாக கைதிகளிடம் பேச உறவினர்களுக்கு உதவும் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள்

கரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகளை, ஆன்லைன் வழியாக சந்தித்துப் பேச, மத்திய அரசின் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள் அதிகளவில் தற்போது பயன் படுத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், கடலூர்,திருச்சி, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. தவிர, மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் கிளைச் சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். வழக்கமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை … Read more

இந்தியாவுக்கு எதிரான யூடியூப் தளங்கள் முடக்கப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான வகையில் செயல்படும் யூடியூப் தளங்கள் முடக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் யூடியூப் தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துவது போன்ற எந்தவொரு கணக்கையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப் நிறுவனமே … Read more

இந்தியனுக்காக இந்தியாவில் இருந்து தயார் செய்யப்பட்ட பட்ஜெட் போன்!

உள்நாட்டின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது மலிவான கைபேசியை அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸ் இன் 2சி-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மலிவான விலையில் இந்த போன் டெக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக தின சலுகையாக போனை வெறும் ரூ.7,499க்கு வாங்க முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் போன் சந்தையில் இருக்கும் ரெட்மி 9 சீரிஸ், … Read more

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 2025-க்குள் ரூ.40,000 கோடி நிதியுதவி: வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆற்றல் குறித்து நிதி ஆயோக் ரிப்போர்ட்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி, சாலைப் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வு இல்லாத நிலைக்கு உதவ வேண்டும்’ என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வங்கிக் கடன் வசதி குறித்த அறிக்கையை நிதி ஆயோக், ராக்கி மவுன்டன் நிறுவனம் (ஆர்எம்ஐ) மற்றும் ஆர்எம்ஐ இந்தியா ஆகிய அமைப்புகள் இன்று வெளியிட்டன. இந்த அறிக்கை மின்சார வாகனங்களுக்கான சில்லரைக் கடனை முன்னுரிமைத் துறையாக … Read more

எலான் மஸ்க் தான் ஒரே தீர்வு – ட்விட்டர் நிறுவனர் ஷாக் அறிக்கை!

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, இதுகுறித்து ட்விட்டர் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி கருத்து தெரிவித்துள்ளார். ஜாக் டோர்சி கடந்த ஆண்டு வரை ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து, ட்விட்டரை வாங்குவதற்காக டெஸ்லா தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அறிவித்த சலுகையை அவர் ஏற்றுக்கொண்டார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், கடந்த 10 நாள்களுக்கு முன்பு சமூக வலைதளமான ட்விட்டரை வாங்குவதற்கான விருப்பத்தை … Read more

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி – இதுவரையிலான சாதனைகளை முறியடிக்கும் இந்தியா

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது இந்தியா. இதுவரை இல்லாத அளவு கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி கடந்த மாதம் 1.67 பில்லியன் அமெரிக்க டாலரை தொட்டது. இது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 49 சதவீதம் … Read more

கரன்சி முதல் பல்கலை. வரை – மத்திய பட்ஜெட் 2022-ல் கவனிக்கத்தக்க 'டிஜிட்டல்' முன்னெடுப்புகள்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2022-23-ல் கரன்சி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு டிஜிட்டல் சார்ந்த முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கே… டிஜிட்டல் கரன்சி: பிளாக் செயின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். இதனை இந்திய ரிசர்வ் வங்கி 2022-23ல் இருந்து வழங்கத் தொடங்கும். மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (CBDC) அறிமுகப்படுத்தப்படும் என்பது டிஜிட்டல் பொருளாதாரம் பெருமளவில் வளர உதவியாக இருக்கும். … Read more