கிருமிநாசினித் திறனுடன் மக்கும் மாஸ்க்குகளை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள்

கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக கிருமிநாசினித் திறன் கொண்ட, மக்கும் முகக்கவசங்களை (மாஸ்க்) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக, தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு, தொழில்துறையை சேர்ந்த நபர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. கரோனா வைரஸ், பல்வேறு இதர வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உயர் செயல்திறனை இந்த முகக்கவசம் கொண்டுள்ளது. மக்கும் திறன் கொண்ட இந்த முகக்கவசம், நல்ல முறையில் சுவாசிப்பதற்கான … Read more

வளைந்த டிஸ்ப்ளே உடன் வெளியாகும் முதல் Tecno போன்!

சீன நிறுவனமான டெக்னோ இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நிறுவனம் பட்ஜெட் விரும்பிகளுக்கு நல்ல விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, டெக்னோ புதிய வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான டீசரை நிறுவனம் அமேசான் ஷாப்பிங் தளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, இந்த போனில் மூன்று பின்பக்க கேமராக்கள், ஹீலியோ ஜி95 சிப்செட், 33W … Read more

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா G21 ஸ்மார்ட்போன்: விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது நோக்கியா G21 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா G21 ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான G20 ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா C01 பிளஸ் போனில் … Read more

மஸ்க் வசமான ட்விட்டர் | வெறுப்புப் பேச்சு குறித்த கவலையில் மனித உரிமை ஆர்வலர்கள்

டெக்சாஸ்: ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குகிறார் எலான் மஸ்க். இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்குமோ என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியாகி உள்ளது. அதன் காரணமாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ட்விட்டர் தளத்தின் கட்டுப்பாடுகள் இனி மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிகிறது. பிரபலங்கள் தொடங்கி … Read more

மூன்று நாள்கள் தாங்கும் பேட்டரி – புதிய நோக்கியா போன் அறிமுகம்!

நோக்கியா நிறுவனம் முன்னதாக நடந்துமுடிந்த MWC நிகழ்வில், இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது. அந்த வகையில் நிறுவனம், பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நிறுவனம் புதிய நோக்கியா ஜி21 பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. மூன்று நாள்கள் தாங்கும் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 அப்டேட், 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியன இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. நோக்கியா ஜி21 அம்சங்கள் (Nokia G21 … Read more

பராக் அகர்வால் சம்பளம் எவ்வளவு? -பணிநீக்கம் செய்தால் ட்விட்டர் ரூ.300 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்?

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை எலான் மஸ்க் வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால். மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றவர். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் … Read more

5 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரின் விலையை கேட்ட மஸ்க்; வைரலாகும் பழைய ட்வீட்

டெக்சாஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் ட்விட்டரின் விலையை ட்வீட் மூலம் கேட்டுள்ளார் மஸ்க். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஈடுபட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே ட்விட்டர் குறித்து பேசி வந்தார் மஸ்க். முதலில் ஜனநாயக செயல்பாட்டுக்கு பேச்சு சுதந்திரம் தேவை என … Read more

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் – எவ்வளவுனு தெரிஞ்சா வாயடச்சு போய்டுவீங்க!

மாஸ் பேச்சு, திடமான முடிவுகள் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு ஹாட் டாப்பிக்காகத் தான் வலம் வருவார். சமீபத்தில், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை குறித்து சரமாரியான விமர்சனங்களை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலேயே முன்வைத்தார். இதற்கு சிலர் பதிலளிக்க, புதிய சமூக வலைத்தளத்தை எலான் மஸ்க் தொடங்கப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டது. ஒருபுறம் அனைவரும் மஸ்கின் புதிய சமூக வலைத்தளத்தின் சுவையை அறிய காத்திருந்த வேளையில், கணிசமான ட்விட்டர் … Read more

மஸ்க் வசமான ட்விட்டர் | 'நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன்' – ட்ரம்ப்

புளோரிடா: மீண்டும் நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கும் நிலையில் இதனை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க். இந்த செய்தி உறுதியானது முதலே அமெரிக்காவின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சார்ந்தவருமான் … Read more

'முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன்' – எலான் மஸ்க்

டெக்சாஸ்: சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை முன்பை காட்டிலும் சிறந்ததாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார் அதனை வாங்கவுள்ள எலான் மஸ்க். உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார் மஸ்க். சாமானியர்கள் … Read more