‘‘ட்விட்டர் எதிர்காலம் நிச்சயமற்றது’’-  ஊழியர்களிடம் பராக் அகர்வால் ஆதங்கம்

வாஷிங்டன்: ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார். அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். … Read more

மேலும் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்

புதுடெல்லி: சமீபத்தில் 78 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று முடக்கியது. இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு இந்தத் தடையை மத்திய அரசு விதித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொதுஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிய … Read more

எலான் மஸ்க் டீலுக்கு சம்மதம் – 44 பில்லியன் டாலருக்கு கைமாறுகிறது ட்விட்டர்

வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஆபஃருக்கு ட்விட்டர் நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க். இது தொடர்பாக ஞாயிறு அன்று நடைபெற்ற ட்விட்டர் … Read more

எலான் மஸ்க் வசமாகிறதா ட்விட்டர்? – தொடரும் பேச்சுவார்த்தை

சான் பிரான்சிஸ்கோ: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டரை 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க தயார் என அறிவித்தார். இந்நிலையில், அது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் … Read more

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் (Realme Narzo) ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் நார்சோ லைன் அப்பில் அண்மைய வரவாக வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன். இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 28-ஆம் தேதி முதல் அமேசான், ரியல்மி வலைதளம் மற்றும் ரீடைல் சந்தையில் … Read more

யூடியூப் தளத்திற்கு வந்த சோதனை – வெளியேறும் ரஷ்ய படைப்பாளிகள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டெக் நிறுவனங்கள் பல ரஷ்யா நாட்டில் உள்ள செயல்பாடுகளை நிறுத்தியது. மேலும், ரஷ்ய சமூக வலைத்தளக் கணக்கும் பெரும்பாலும் முடக்கப்பட்டது. இதற்கு ரஷ்யாவும் தற்போது எதிர்வினையாற்றி வருகிறது. அதன்படி, இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை ரஷ்யா முடக்கியதுடன், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. தொடர்ந்து ரஷ்ய மக்களும் அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக, அமெரிக்க தளங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், பிராண்ட் அனலிட்டிக்ஸ் … Read more

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் Facetime கேமராவைக் கொண்டுவரும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை சிறந்த தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன்14 ஸ்மார்ட்போன் மாடல்களை சந்தைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியாகக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தகவல்கள் பல கசிந்து வருகின்றன. இப்போது நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஆப்பிள் தனது புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை முற்றிலும் புதிய … Read more

சும்மா… சும்மா ரீசார்ஜ் செய்ய வேண்டாம் – ஜியோவின் சூப்பர் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது. மலிவான விலையில் அதிக நாள்கள் செல்லுபடியாகும் திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்களானால், ஜியோவில் இதுபோன்ற இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஜியோ பிற டெலிகாம் நிறுவனங்களை விட அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது. மொத்தம் 336 நாள்கள் செல்லுபடியாகும் மலிவான திட்டத்தை ஜியோ … Read more

கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல்: பிளே ஸ்டோரில் கூகுளின் புதிய கொள்கை எதிரொலி

கலிபோர்னியா: பிளே ஸ்டோரில் கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய கொள்கை முடிவு காரணமாக ஆண்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. உலக அளவில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் போன்களை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக பயனர்களின் பிரைவசி கருதி கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது கொள்கை முடிவுகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில் இப்போது பிளே ஸ்டோரில் கூகுள் கொண்டுவந்துள்ள புதிய கொள்கை மாற்றத்தினால் தேர்ட் … Read more

கிரியேட்டர்கள் வாழ்வில் விளக்கேற்றிய இன்ஸ்டாகிராம்!

நம்மிடையே இன்ஸ்டாவில் களமாடுபவர்கள் ஏராளம். ரீல்ஸ், படங்கள், நேரலை என மக்கள் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் இன்ஸ்டா மூலம் உலகிற்கு காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், இதற்காக நேரத்தை ஒதுக்கும் கிரியேட்டர்களுக்கு பெரிதாக எந்த வருமானமும் இல்லாமல் இருந்தது. இதே கதி எனக் கிடக்கும் சில கிரியேட்டர்களின் மனநிலையைப் புரிந்துகொண்ட மெட்டா நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள கிரியேட்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய வசதியை அறிமுகம் செய்வதாக தெரிவித்தது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் … Read more