பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!

இணையம் மந்தமாக இருக்கும் நேரத்தில், அனைவருக்கும் புதிய டிரெண்டிங் டாபிக் கொடுப்பதில் வல்லவராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் . எப்போது ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் மஸ்க், தனது பதிவுகளின் மூலம் அவ்வப்போது ஹாட் டிரெண்டாகி விடுகிறார். சமீபத்தில் ட்விட்டர் குறித்து சில கருத்துக்கணிப்பை ட்விட்டரிலேயே நடத்திய மஸ்க், பின்னாளில் ட்விட்டர் பங்குகளை வாங்கி, அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு சர்ச்சைக்குள்ளான எமோஜியைக் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனரை … Read more

தியேட்டர் அனுபவத்திற்கு ரெடியா – விரைவில் வெளியாகும் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி!

சாம்சங், எல்ஜி, சோனி, பிபிஎல் என மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த டிவி பிராண்டுகளை ஓரம் தள்ளும் வகையில், சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் டிவி என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த மக்களுக்கு, அசாத்திய விலையுடன் ஆண்ட்ராய்டு டிவிக்களை சியோமி அறிமுகப்படுத்தியது. குறைந்த விலை, அதிகபடியான அம்சங்கள், பெரிய திரை என சியோமி நிறுவனம் பயனர்களுக்கு அறிமுகம் செய்த டிவிக்கள், அவர்களை தியேட்டர் தரத்திலான அனுபவத்திற்கு … Read more

சுகமான உறக்கத்தை தரும் Flipkart கூலிங் டேஸ் AC தள்ளுபடி விற்பனை!

வெயில் காலத்தில் பாதி உறக்கத்தோடு நீங்கள் புலம்பிக் கொண்டு இருப்பது பிளிப்கார்ட் காதில் விழுந்துவிட்டது. உங்களுக்காக, அதுவும் இந்த கோடை கால வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் ஏசிக்கள் மீது அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. அந்த வகையில், தற்போது Flipkart Super Cooling Days சலுகை விற்பனைத் தினத்தைத் தொடங்கி உள்ளது. இந்தக் காலத்தில் பல குளிர் சாதனப் மின்னணு பொருள்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கோடைக்கு ஏசி, குளிரூட்டி, … Read more

கையில் மைக்ரோ சிப்! வியக்கவைக்கும் புதிய பேமென்ட் தொழில்நுட்பம்!

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சந்தையை அடையும் போது, டெக் பொருள்களின் அளவுகளும் சிறிதாகிக் கொண்டே போகிறது. பயனர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இதன் வடிவமைப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மைக்ரோ சிப்புகள். நெல்மணி அளவிலேயே இந்த மைக்ரோ சிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே பெரிதாக பயன்படுத்தப்பட்ட வந்த இத்தொழில்நுட்பம், தற்போது அனைத்து துறைகளிலும் காலூன்றத் தொடங்கி உள்ளது. கிரெடிட் கார்டுகள் முதல் கார் சாவி வரை அனைத்துக்குமே உதவும் வகையில் மைக்ரோ சிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் … Read more

கழிப்பறையை விட போனில் அதிகளவு கருமிகள் – இன்பினிக்ஸ் Smart 6 அளித்த தீர்வு!

நீங்கள் தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட்போன்களில் கழிப்பறை இருக்கைகளை விட 10 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போன் கழிப்பறை இருக்கையை விட மோசமானதாகவும், கிருமிகள் நிறைந்ததாகவும் இருப்பதாகவு ஒரு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில், சில பாக்டீரியாக்கள் மிகவும் தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றன. இன்பினிக்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் அனிஷ் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். … Read more

பவர்ஃபுல்லா OnePlus 10 வெளியாகும் – 150W வாட் பாஸ்ட் சார்ஜிங் இருக்காம்!

ஸ்மார்ட்போன் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் OnePlus 10 போனின் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 10 தொடரில் புதுமையான வெண்ணிலா மாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதில் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒன்பிளஸ் 10 ஸ்மார்ட்போனில் நிறுவனம் 150W சக்திவாய்ந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொடுக்க உள்ளது. மேலும், ப்ரோ போனில் உள்ளது போல ஸ்னாப்டிராகன் 3 … Read more

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள் என்னென்ன?! 

புதுடெல்லி: ரியல்மி நிறுவனத்தின் GT 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பிரீமியம் போன் பிரிவில் GT 2 போனை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் பயோ பாலிமர் ஸ்மார்ட்போன் டிசைன் கொண்ட போன் இது என பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை … Read more

ஸ்மார்ட்போன் ரொம்ப புதுசு; ஆனா கொஞ்சம் பழசு – சாம்சங் எம்53 5ஜி போன் அறிமுகம்!

முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய பிரீமியம் பட்ஜெட் ரக Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது பழைய கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வெளியாகி இருக்கும் சாம்சங்கின் Galaxy M53 5G போன், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் விற்பனை … Read more

அந்த மாதிரி படங்களை மறைக்கும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜிங் சேவையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. ஆப்பிளின் “செய்திகளில் தகவல் தொடர்பு பாதுகாப்பு” அம்சம், நிறுவனத்தின் செய்தி சேவையைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு அனுப்பப்படும் நிர்வாண கொண்ட படங்களை தானாகவே மங்கலாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த அம்சம் இப்போது இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள … Read more

கூகுள் போட்ட தடை! இனி Android போன்களில் அழைப்புகளை பதிவுசெய்ய முடியாது!

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும், Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. இந்நிலையில், போட்டி இயங்குதளமான ஆப்பிள் OS இல்லாத அம்சங்கள் பலவற்றை ஆண்ட்ராய்டு கொண்டுள்ளது. பயனர்களுக்கு எளிதில் விளங்கக்கூடிய வகையில், இதன் பயன்பாடு இருப்பதால், மக்கள் ஆண்ட்ராய்டு நிறுவப்பட்ட ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது என்பது மிகவும் எளிதானதாகும். ஸ்மார்ட்போனின் கூடவே டையரில் நிறுவப்பட்ட ரெக்காட்டிங் அம்சங்கள் ஆனாலும் சரி, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் … Read more