Whatsapp பயனர்களே உஷார் – சுமார் 18 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா!

பயனர் மேம்பாடு, அவர்களின் பாதுகாப்பு என மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பல புதுப்புது அம்சங்களை அவ்வப்போது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதனுடன், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பயனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்தவகையில், Whatsapp இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும், சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட … Read more

Poco X4 Pro போன் இருக்க வேற என்ன வேணும் – MWC 2022 நிகழ்வில் வெளியீடு!

சியோமி நிறுவனத்திடம் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக மாறிய போக்கோ, தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பார்சிலோனாவில் நடக்கும் உலகின் பெரிய MWC 2022 நிகழ்வில், Poco X4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ சார்ஜிங் ஆதரவு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது. போக்கோ எக்ஸ் … Read more

புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா – இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் ஆப்பிள்!

இந்தியாவில் Apple நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வை, அதன் விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வெளியாகும் ஆப்பிள் தகவல் சாதனங்கள் குறித்த தகவல்கள் அவ்வபோது கசிந்தவன்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது ஆப்பிள் iPhone SE விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,000க்கு இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத … Read more

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஆறாவது நாளாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் கடுமையான சண்டையிட்டு வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது போர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதில், … Read more

Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!

Asus இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ரோஜ் ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இன்று தனது காம்பேக்ட் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போனில் பிளாக்‌ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் … Read more

இந்திய அறிவியல் தினத்துக்கு வித்திட்ட 'ராமர் விளைவு' நடந்தது எப்படி?

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் விஞ்ஞானி சர் சி. வி.ராமனைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் – பிப்ரவரி 28-ம் நாள் கொண்டாடப்படுகிறது. 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ஃபோட்டான்கள் சிதறும் ஒரு நிகழ்வை அவர் கண்டுபிடித்தார், அது பின்னர் ‘ராமன் விளைவு’ என்று அறியப்பட்டது. கண்டுபிடிப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,1930 இல் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது, இது அறிவியல் துறையில் இந்தியாவிற்கான முதல் நோபல் பரிசு ஆகும். … Read more

Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இலவசம்!

பெரும்பாலான மக்கள் நிராகரிக்க முடியாத இடத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. பல மேம்பட்ட சேவைகள் மூலம் பயனர்களை மகிழ்வூட்டும் கூகுள், தற்போது Google Play Pass எனும் புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தங்களுக்குத் தேவையான செயலிகள் மற்றும் கேம்களை Google Play Store அல்லது கூகுள் ப்ளே பயன்பாடு மூலம் பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த நிலையில், கூகுள் இந்தியா அறிவித்திருக்கும், புதிய சந்தா திட்டம் பயனர்களுக்கு பெரும் வசதியாகப் பார்க்கப்படுகிறது. … Read more

சைலண்டாக அறிமுகமாகும் Nokia போன்கள் – விலையை கேட்டா அசந்து போய்ருவீங்க!

HMD Global நிறுவனம், தனது புதிய மூன்று Nokia ஸ்மார்ட்போன்களை பார்சிலோனாவில் நடக்கும் MWC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Nokia C21, Nokia C21 Plus , and Nokia C2 2nd Edition ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை குறித்து எந்த தகவலையும் நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த … Read more

Amazon தள்ளுபடி விற்பனை தினங்கள் – ஸ்மார்ட்போன்கள் மீது 20000 ரூபாய் வரை தள்ளுபடி!

Flipkart ஷாப்பிங் தளத்திற்கு போட்டியாக Amazon India Shopping நிறுவனமும், ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விற்பனை தினங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தினங்களில் ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதல் தள்ளுபடிகள், Exchange ஆஃபர்கள் கிடைக்கிறது. பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை, 28ஆம் தேதி உடன் முடிவடைகிறது. சலுகை நாள்களில் பயனர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதல் தள்ளுபடியும், பழைய ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல எக்ஸ்சேஞ்ச் வேல்யூவும் கிடைக்கிறது. Flipkart Sale: வெறும் 1699 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி லேட்டஸ்ட் 5ஜி … Read more

Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று அதிரடியாக முன் அறிவிப்பு இன்றி போர் தொடுத்தது. இதில் 150க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய கிவ் நகரத்தை நோக்கி ரஷ்ய ராணுவம் குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் கணினிகளின் தீங்கிழைக்கும் மென்பொருள்களை நிறுவி, ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தியது. திக்குமுக்காடி போன உக்ரைன், செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய கணினிகளை உலகளாவிய ஹேக்கர்கள் குழு ஒன்று … Read more