இது தாங்க பெஸ்ட் சாய்ஸ் – விற்பனைக்கு வந்த பட்ஜெட் மோட்டோ போன்!

மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தனது ஜி தொகுப்பில் புதிய மோட்டோரோலா ஜி22 போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. பட்ஜெட் விரும்பிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் கேமரா, 5000mAh பேட்டரி திறன், 20W டர்போ சார்ஜிங், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியன சிறப்பம்சங்களாக உள்ளன. மோட்டோ … Read more

தள்ளுபடி விலையில் ரியல்மி புக் பிரைம் லேப்டாப் விற்பனை தொடக்கம்!

சீனாவின் ரியல்மி நிறுவனம், சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய லேப்டாப்பை இந்திய டெக் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான ரியல்மி புக் பிரைம் லேப்டாப்பின் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த மடிக்கணினியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தெளிவான காட்சியை வழங்க 2K டிஸ்ப்ளே, விண்டோஸ் 11 இயங்குதளம், Intel 11 Gen புராசஸர், புதிய கூலிங் சிஸ்டம், DTS Surround ஒலித்திறன், முழு மெட்டல் பாடி கட்டமைப்பு, சக்திவாய்ந்த … Read more

உலகளவில் சில மணிநேரம் முடங்கிய யூடியூப் சேவை

கலிபோர்னியா: உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் செவ்வாய்க்கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம். இத்தகைய சூழலில் … Read more

‘விவோ X ஃபோல்ட்’: மடிக்கும் வகையிலான ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்தது விவோ 

டுங்க்வான் (சீனா): மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனான ‘விவோ X ஃபோல்ட்’ போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இது அந்நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போனாகும். சீன தேசத்து ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ டிஜிட்டல் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாடல் போன்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது விவோ. இப்போதைக்கு இது சீன … Read more

வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!

பயனர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ஒப்போ நிறுவனத்தின் பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Qualcomm Snapdragon 6 சீரிஸ் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன்னர் கசிந்த தகவல்களின்படி, 4ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் ரூ.20,000க்கும் கீழ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தையில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை விட அதிகமான விலையில், புதிய ஒப்போ பிரீமியம் போன் அறிமுகம் … Read more

ஆப்பிள் கணினியில் உள்ள அம்சத்தைக் கொண்டு வரும் மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது விண்டோஸ் 11 பதிப்பை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு கணினியாக தனது புதிய பதிப்பை நிறுவனம் அப்டேட் மூலமாக வழங்கி வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளியான விண்டோஸ் 11 பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் பதிப்பில் புதிய அம்சத்தை தற்போது நிறுவியுள்ளது. இந்த அம்சத்திற்கு மைக்ரோசாஃப்ட் பீக் என பெயரிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் MacOS கணினிகளில் உள்ள குயிக் லுக் போலவே இந்த அம்சம் … Read more

5 நிமிட சார்ஜ் போதும்; புதிய BoAt இயர்பட்ஸில் 1 மணிநேரம் அரபிக் குத்து கேட்கலாம்!

பிரபல நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான BoAt தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் மலிவான இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது Boat Airdopes 500 ANC இயர்பட்ஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போட் சில நாள்களுக்கு முன்பு அமேசானில் இந்த ஆடியோ தயாரிப்பை பட்டியலிட்டது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 8 மில்லிமீட்டர் ஆடியோ டிரைவர்கள், குறைந்த லேட்டன்சி ஆடியோ போன்ற அம்சங்கள் உள்ளன. போட் ஏர்டோப்ஸ் … Read more

ஏப்ரல் 27 அன்று ரிலீசாகும் சியோமியின் புதிய அவதாரம்!

சியோமி விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27, 2022 அன்று இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் நேரலை நிகழ்வு மூலம் வெளியிடுகிறது. இதனுடன் வேறும் சில சியோமி தயாரிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில், சாம்சங் E5 அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிளாக்‌ஷிப் புராசஸர், சூப்பர் கேமரா, அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங், என்.எப்.சி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. நம்ம சென்னையில் ஆப்பிள் … Read more

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ F21 புரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நியூ டெல்லி: ஒப்போ நிறுவனம் இந்தியாவில் இன்று அதன் ‘F’ சீரிஸ் போன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. F21 புரோ 5ஜி மற்றும் 4ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதோடு ஒப்போ என்கோ ஏர் 2 புரோ இயர்பட்ஸும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்-ரேன்ஜ் விலையில் இந்த போன்கள் அறிமுகமாகியுள்ளன. வரும் 27-ஆம் தேதி வரையில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் அறிவித்துள்ளது ஒப்போ. இருந்தாலும் … Read more

மாணவர்களுக்காக HP அறிமுகப்படுத்திய குரோம்புக் லேப்டாப்ஸ்!

ஹெச்பி இன்று புதிய Chromebook நோட்புக்கை அறிமுகப்படுத்தியது. HP Chromebook x360 14A லேப்டாப்பானது Intel Celeron புராசஸருடன் வருகிறது. Chromebook தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பு 4 முதல் 15 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் விலை ரூ.23,888 முதல் தொடங்குகிறது. பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து டாஸ்குகளையும் இதில் செய்ய முடியும். அதுமட்டும் இல்லாமல், ஆன்லைன் கிளாஸுகளுக்கும் இந்த லேப்டாப் பயனுள்ளதாக … Read more