அதென்ன 11ஜிபி Dynamic RAM… குறைந்த விலைக்கு Realme நார்சோ 50 அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான விலை அம்சங்களை ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று தனது குறைந்த விலை Realme Narzo 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ், 11ஜிபி டைனமிக் ரேம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு … Read more

இந்தியாவின் புதிய காலிங் ஸ்மார்ட்வாட்ச் Corseca Snugar அறிமுகம்!

இந்தியாவில் ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ப்ளூடூத் ஹெட்போனில் தொடங்கிய இந்த ஓட்டம் நிற்காமல் பயணிக்கிறது. ஸ்மார்ட்பேண்ட், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் ரிங், இயர் பட்ஸ் என அனைத்தையும் பயனர்கள் தற்போது விரும்புகின்றனர். இதுகுறித்த தகவல்களை தேடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்க நிறுவனங்கள் புதுபுது தயாரிப்புகளை டெக் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய நிறுவனமான Just Corseca, ஸ்னக்கர் (Snugar) எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. … Read more

பணத்தை அள்ளித்தரும் பேஸ்புக்: TikTok-ஐ ஓரங்கட்டி பயனர்களை ஈர்த்த Meta நிறுவனம்!

டெக் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி இது. சமூக வலைதள ஜாம்பவானான பேஸ்புக், தனது பயனர்களை ஒவ்வொரு நாளும் இழந்து வந்தது. இதிலிருந்து பயனர்கள் டிக்டாக் போன்ற தளங்களுக்கு தாவினர். இதனை சரிசெய்ய தற்போது Facebook-இன் தாய் நிறுவனமான Meta பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மெட்டா நிறுவனம் இன்று முதல் பேஸ்புக் Reels சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் … Read more

இது நீங்க நெனக்கிற மாதிரி போன் இல்ல… வேற லெவல் பெர்பாமன்ஸ் கொடுக்கும் iQOO 9 Pro

Vivo நிறுவனத்தின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வகையான பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இன்றைய அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. iQOO 9 Pro ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட், … Read more

Airtel வாடிக்கையாளர்கள் விரும்பும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்!

நாட்டில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனங்கள் திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், அதிவேக இணைய சேவை, ஏர்டெல் சேவைகளின் இலவச அணுகல்கள் … Read more

Intelligent டிஸ்ப்ளே சிப், Gimbal கேமரா உடன் வெளியான iQOO 9 ஸ்மார்ட்போன்!

சீன நிறுவனமான Vivo-வின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இடம்பெற்றுள்ளது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. iQOO 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ 5ஜி சிப்செட், 120W பாஸ்ட் சார்ஜிங், இண்டெலிஜெண்ட் டிஸ்ப்ளே சிப், … Read more

Flagship அம்சங்கள் கொண்ட குறைந்த விலை Moto Edge 30 pro ஸ்மார்ட்போன் – விலை இதுதான்!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிவரவான மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ (Moto Edge 30 Pro) இந்தியாவில் நாளை (பிப்ரவரி 24)அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான டீசரை Flipkart Shopping தளம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் வெளியான Moto Edge X30 ஸ்மார்ட்போனின் இந்திய பதிப்பு தான் மோட்டோ எட்ஜ் 30 என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 … Read more

Flipkart Electronics அதிரடி சலுகை விற்பனை – 50% வரை ஆஃபர்கள்!

இந்தியாவின் பிரபல ஷாப்பிங் தளமான Flipkart, எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான சலுகை விற்பனையை இன்று (பிப்ரவரி 23) தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தினங்களில் 10% விழுக்காடு வரை கேஷ்பேக்கும், பொருள்கள் மீது 50% விழுக்காடு வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. IDFC First வங்கி கடன் அட்டைகளுக்கு 10% விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. Flipkart Axis Bank பயனர்களுக்கு 5% விழுக்காடு கேஷ்பேக் … Read more

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – 'Truth Social' ஆப் மூலம் Twitter பேஸ்புக்குக்கு டிரம்ப் வைத்த செக்!

அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு வந்த சில வன்முறை தூண்டும் தகவல்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. … Read more

Viral Video – 7ஆம் வகுப்பு மாணவனின் பிரமிக்க வைக்கும் கண்டுப்பிடிப்பு!

புவியில் வாழும் உயிர் ஜீவன்களுக்கு இருக்கும் குறைபாட்டில் மிகவும் துயரமானது பார்வை திறன் குறைபாடாகும். இவர்களின் துயரை துடைக்க கோடி கரங்கள் போதாது. இப்படி பட்ட மக்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் தற்காலத்தில் அவர்களுக்கு புத்துயிரை கொடுத்து வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவர்களை பிறரை போலவே செயல்பட வைக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவரான இனியன், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஸ்மார்ட் குச்சியைக் உருவாக்கி உள்ளார். வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்ப உதவியுடன் … Read more