வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!

WhatsApp அதன் பயனர்களுக்கு அரட்டை அனுபவத்தை மேம்படுத்த 6 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் வாய்ஸ் மெசேஜ் வசதியில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த புதிய அம்சங்கள் பயனர்களுக்கு முன்பை விட வாய்ஸ் மெசேஜ் அனுப்புதல் மற்றும் பெறுதல் போன்ற செயல்பாடுகளில் சிறந்த அனுபவத்தை வழங்கும். மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் வசதியில் மொத்தம் 6 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Out of chat playback, Pause and resume recording, … Read more

இந்தியாவில் பிப்ரவரியில் 10 லட்சத்திற்கும் மேலான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை: காரணம் என்ன? 

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் லட்சோப லட்ச வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதித்து வருகிறது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் இதே போல லட்ச கணக்கிலான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் காரணமாக வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை விவரிக்கும் வகையில் ஒன்பதாவது முறையாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி … Read more

ஜியோவைத் தொடர்ந்து Airtel வெளியிட்ட 30 நாள் வேலிடிட்டி திட்டம்!

நீங்கள் Airtel வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக ரூ.296 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டமானது, 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் என்பது தான் கூடுதல் சிறப்பு. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிடுகையில், வரம்பற்ற அழைப்புகளுடன் ஒரு காலண்டர் மாதம் செல்லுபடியாகும் திட்டத்தை சில தினங்களுக்கு முன் ஜியோ அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல்லும் … Read more

மிரட்டும் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 12 ப்ரோ!

இந்தியாவில் தனது தயாரிப்புகளை வெளியிட்டு, பயனர்களை கவர்ந்து வைத்திருக்கும் சீன நிறுவனமான Xiaomi புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் Flagship ஸ்மார்ட்போன்களுக்கு இதன் வெளியீடு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட நோட் 10 சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நேரத்தில் புதிய Mi Pad 5 டேப்லெட்டையும் சியோமி இந்தியாவில் இந்த வாரம் வெளியிட உள்ளது. இதற்கிடையில் இந்த புதிய Flagship ஸ்மார்ட்போன் வெளியீடு … Read more

வெறும் 4000 ரூபாய்க்கு Realme ஸ்மார்ட் டிவி – அதிரடி தள்ளுபடி விற்பனை!

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் Big Bachat Dhamal Sale விற்பனை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று தொடங்கிய விற்பனை ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று நாள் விற்பனையில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற மின்னணு பொருள்களை அதிக தள்ளுபடியில் வாங்கலாம். Flipkart விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைத்தால், இந்த தள்ளுபடி விற்பனை நாள்கள் உங்களுக்கு … Read more

ரூ.399க்கு அதிவேக ஃபைபர் இன்டர்நெட் – சூப்பர் ஆஃபர்களுடன் டாடா டெலி பிராட்பேண்ட்!

வீட்டில் இருந்து அலுவலக பணிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறந்த பிராட்பேண்ட் சேவை தேவைப்படுகிறது. பல நிறுவனங்கள் சேவைகளை அளித்தாலும், குறைந்த கட்டணத்தில் நல்ல வேகத்துடன் இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் குறைவாகவே உள்ளனர். இந்த குறையை முற்றிலுமாகப் போக்க TATA TELE BROADBAND பயனர்களுக்காக குறைந்த விலை இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. டாடாவின் Fiber ஆப்டிக்ஸ் சேவை, அதிவேக பிராட்பேண்டை இல்லத்தில் கொண்டு சேர்க்கிறது. இதனால், குறைந்த செலவில் வேலைகளை நிறைவாக செய்ய முடியும். டாடா … Read more

ஷூவில் கேமரா; போன் சார்ஜர் – Ixigo அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஷூஸ்!

இன்று நம்மைச் சுற்றி ஸ்மார்ட் சாதனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஏசிகளில் இருந்து ஸ்மார்ட் வாட்ச்கள் வரை பெரும்பாலான பொருள்கள் ஸ்மார்ட் ஆகிவிட்டது. இருப்பினும், ஸ்மார்ட் ஷூக்கள் குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தற்போது அதற்கும் ஒரு வழியை திறந்துள்ளது இக்ஸிகோ நிறுவனம். நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட் ஷூக்கள் லொகேஷன் டிராக்கர், முன் மற்றும் பின்புற … Read more

இ-வாகன தீ விபத்துகளும் 'பேட்டரி' பீதியும் – நாம் கவனிக்க வேண்டியது என்ன? – ஒரு பார்வை | HTT Prime

சென்னை: சமகால – எதிர்கால போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் சூழலில், அந்த வாகனங்களின் பேட்டரிகளால் ஏற்படும் திடீர் தீவிபத்துகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளன. இதுகுறித்து அடிப்படை விஷயங்களை அறிய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபுணர்கள், மின் வாகனப் பயன்பாட்டு வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினாலே போதும்; அச்சம் அவசியமில்லை என்றும் சொல்கின்றனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. வாகனப் பெருக்கம் மற்றும் புகை வெளியேற்றத்தின் … Read more

வில்லேஜ் விஞ்ஞானி கிராமத்திற்காக என்ன செய்தார் – மக்கள் ஏன் அவரை கொண்டாடுகின்றனர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பியாங் கிராமத்தைச் சேர்ந்த கேதார் பிரசாத் மஹ்தோ என்பவர் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தனது கிராம மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பது விருப்பமானதாக இருந்தது. மின்சாரம் இல்லாமல், பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததைக் கண்டு கேதார் வருத்தமடைந்தார். அதுமட்டுமில்லாமல், கிராம சிறுவர்களின் படிப்பும் மின் வெட்டால் தடைபட்டு வந்தது. இதற்கான சரியான தீர்வை நோக்கி எலக்ட்ரீஷியன் கேதரின் எண்ணோட்டங்கள் இருந்தது. தான் கல்வி கற்க முடியாமல் … Read more

மலிவு விலை boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் – விலை ரொம்ப கம்மி!

boAt இந்திய சந்தையில் குறைந்த விலையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நிறுவனம் அதன் மலிவான ஸ்மார்ட்வாட்ச் Boat Wave Lite-ஐ இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. போட் நிறுவனம் கடந்த வாரம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்சை குறித்து டீஸ் செய்திருந்தது. இப்போது, Amazon India தளத்தில் போட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்வாட்சின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. boAt இன் புதிய ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,000க்கும் குறைவாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more