இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக்கில் உள்ள வசதியை போல, கவர் இமேஜ்-ஐ கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக வணிக ரீதியிலான வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி, அடுத்தடுத்து பீட்டா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயனர்களுக்கு அளித்து வருகிறது. தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை … Read more

டிண்டர் தெரியும்; அதென்ன ராயா ஆப் – பதிவுசெய்ய ஒரு லட்சம் பேர் காத்திருப்பு!

டிஜிட்டல் உலகில் ஒரு துணையை கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்ல. ஒரு ஸ்மார்ட்போன் போதும்; அனைத்தையும் சாத்தியமாக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செயலியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா காலகட்டத்தில் இந்த செயலிகளின் பயன்பாடு என்பது பன்மடங்கு உயர்ந்தது. இதில், Tinder, Bumble, Hinge, Tinder, OkCupid, Coffee Meets Bagel, Happn போன்ற செயலிகள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் உலகில் … Read more

செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி Airtel, அதன் பயனர்களுக்கு புது திட்டங்களை அறிவித்து வருகிறது. ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து பயனர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு, நிறுவனம் பயனர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனமானது, 3 ஒரு வருட திட்டங்களை பயனர்களுக்காக தங்கள் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதில் ரூ.2999, ரூ.3359 ஆகிய திட்டங்கள் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒரே பலனை அளித்திருக்கும் … Read more

Instagram புதிய அப்டேட்: இனி Stories பிடித்திருந்தால் லைக்ஸுகளை பறக்கவிடலாம்!

மெட்டா நிறுவனத்தின் பிரபல புகைப்படம் பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்டுகள் இருந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘ Private Story Likes ’ என அழைக்கப்படுகிறது. பல கோடி பயனர்கள் உலாவும் தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மெட்டா வழங்கியுள்ளது. இச்சூழலில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும்போது, அது ஸ்டோரி … Read more

Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

ஆசஸ் நிறுவனம் வெகு நாள்கள் கழித்து புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்தாண்டு வெளியான நிறுவனத்தின் கேமிங் போனான ஆசஸ் ரோஜ் 5 சீரிஸ் தொகுப்பில் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் சேர்ந்துள்ளது. ஆசஸ் ரோஜ் 5எஸ் (Asus Rog Phone 5s), ரோஜ் 5எஸ் ப்ரோ ஆகிய புதிய இரு மாடல்கள் இன்று இந்திய சந்தையில் வெளியானது. சிறந்த சாம்சங் டிஸ்ப்ளே, இரண்டு பேட்டரிகள், இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்டுகள், 8K வரை வீடியோ எடுக்கும் … Read more

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டாலும், புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் (MediaTek Dimensity 810), இரட்டை லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், … Read more

iPhone SE 3: வெளியாகும் குறைந்த விலை ஐபோன் – ஐபோன் எஸ்இ 3 விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் தனது பட்ஜெட் ஐபோனை விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 3 என்று பெயரிடப்பட்டுள்ள 5ஜி ( iPhone SE 3 5G ) ஸ்மார்ட்போனை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் விரும்பிகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை இது கிளப்பி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிகழ்வு இருந்தது. ஆனால், இந்தாண்டு மார்ட் 8 ஆம் தேதி நடைபெறும் ‘Apple March Event’ நிகழ்வில் வைத்து இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. … Read more

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக ‘Sell Back Program’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம். பிளிப்கார்ட் பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு … Read more

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

இன்றைய உயர் தொழில்நுட்ப உலகில் வீட்டில் இருந்து வேலை செய்யவும், இணையம் வழியாக வகுப்புகளில் கற்கவும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் அத்தகைய சிறந்த அதிவேகத் திறனுடைய பிராட்பேண்ட் திட்டங்களையே தேடுகின்றனர். இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் அதிவேக டேட்டாவை மட்டுமல்லாது, அதிக டேட்டா வரம்புகள், இன்னபிற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது பெரும்பாலான டெலிகாம் ஆபரேட்டர்கள் 1 Gbps வேகத்தில் திட்டங்களை வழங்குகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு 150 Mbps வேகம் கொண்ட … Read more