போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை
சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளை போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன. … Read more