Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

ஆசஸ் நிறுவனம் வெகு நாள்கள் கழித்து புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்தாண்டு வெளியான நிறுவனத்தின் கேமிங் போனான ஆசஸ் ரோஜ் 5 சீரிஸ் தொகுப்பில் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் சேர்ந்துள்ளது. ஆசஸ் ரோஜ் 5எஸ் (Asus Rog Phone 5s), ரோஜ் 5எஸ் ப்ரோ ஆகிய புதிய இரு மாடல்கள் இன்று இந்திய சந்தையில் வெளியானது. சிறந்த சாம்சங் டிஸ்ப்ளே, இரண்டு பேட்டரிகள், இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்டுகள், 8K வரை வீடியோ எடுக்கும் … Read more

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டாலும், புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் (MediaTek Dimensity 810), இரட்டை லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், … Read more

iPhone SE 3: வெளியாகும் குறைந்த விலை ஐபோன் – ஐபோன் எஸ்இ 3 விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் தனது பட்ஜெட் ஐபோனை விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 3 என்று பெயரிடப்பட்டுள்ள 5ஜி ( iPhone SE 3 5G ) ஸ்மார்ட்போனை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் விரும்பிகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை இது கிளப்பி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிகழ்வு இருந்தது. ஆனால், இந்தாண்டு மார்ட் 8 ஆம் தேதி நடைபெறும் ‘Apple March Event’ நிகழ்வில் வைத்து இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. … Read more

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக ‘Sell Back Program’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம். பிளிப்கார்ட் பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு … Read more

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

இன்றைய உயர் தொழில்நுட்ப உலகில் வீட்டில் இருந்து வேலை செய்யவும், இணையம் வழியாக வகுப்புகளில் கற்கவும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் அத்தகைய சிறந்த அதிவேகத் திறனுடைய பிராட்பேண்ட் திட்டங்களையே தேடுகின்றனர். இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் அதிவேக டேட்டாவை மட்டுமல்லாது, அதிக டேட்டா வரம்புகள், இன்னபிற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது பெரும்பாலான டெலிகாம் ஆபரேட்டர்கள் 1 Gbps வேகத்தில் திட்டங்களை வழங்குகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு 150 Mbps வேகம் கொண்ட … Read more

Happy Valentines day 2022: காதலர் தினத்தைக் கொண்டாடும் கூகுள்!

ஆணின் இதயம் அவளிடத்திலும், அவளது இதயம் ஆணின்னிடத்திலும் ஆரோக்கியமாக துடிக்கின்றனவா என உறுதிச்செய்துக்கொள்ளும் வருடாந்திர இதய பரிசோதனைத்தான் காதலர் தினம் . சாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்தையும் கடந்தது காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்பை, காதல் இணையுடன் கொண்டாடி வருகிறனர். கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் … Read more

Infinix zero 5g: முதல் 5ஜி போன்… ஏன் இப்படி செய்தது இன்பினிக்ஸ்!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியானது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G) என்று பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 5ஜி (MediaTek Dimensity 900) சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன், 13 5ஜி பேண்டுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS 10 ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் … Read more

Free Fire banned: 54 சீன செயலிகளுக்கு தடை – அலிபாபாவையும் விட்டு வைக்காத அரசு!

இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் மொபைல் செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவைத் தொடர்ந்து 2020 ஜூன் மாதன் சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO … Read more

Free Fire redeem code: காதலர் தின பிரீ பையர் சலுகைகள்!

தினமும் பிரீ பையர் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் … Read more