ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா?

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா? கூகுள் தளம் இதற்காக ஒரு வசதியைச் செய்துள்ளது. கூகுளின் சேவைகளான மேப்ஸ், ஜிமெயில், தேடல், புகைப்படங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும் நபர் என்றால், அல்லது உங்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்குமென்றால் கூகுளிடம் உங்களைப் பற்றிய எக்கச்சக்கமான தரவுகள் இருக்கும். சிலர் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கூட சேமித்து வைத்துள்ளனர். … Read more

பெயரை மாற்றி ரீ பிராண்டிங்குக்கு தயாராகிறதா பேஸ்புக்? அமெரிக்க ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமா?

பேஸ்புக் சமூகவலைதளம் விரைவில் புதிய பெயருடன் ரீ பிராண்டிங்க்குக்கு ஆயத்தமாகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன. சமூக வலைதள உலகின் ஜாம்பவான் பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் … Read more

JioBook Laptop: லேப்டாப் பிராண்டுகள் ஷாக்… சந்தையில் கால்பதிக்கும் ஜியோ!

மொபைல் போன்களுக்குப் பிறகு மடிக்கணினிகளை சந்தைக்குக் கொண்டுவருகிறதா ஜியோ? என்ற கேள்வி இணையத்தில் உலா வருகிறது. இத்தகைய செய்திகள் பல தொடர்ந்து வெளிவந்தாலும், ஜியோ தரப்பில் இருந்து எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஜியோ லேப்டாப் குறித்த புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. கசிந்த தகவல்களின் படி, ஜியோ புக் லேப்டாப் மலிவு விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ தரப்பில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் மடிக்கணினிக்கு ஜியோ புக் என்று பெயரிடப்படலாம் என … Read more

பழைய கூகுள் குரோமில் பாதுகாப்பு ரீதியாக ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை

கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களின் கணினிக்குள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியான இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு கூகுள் குரோம் பயன்பாட்டா ளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, பயன்பாட்டாளர்கள் கூகுள் குரோமை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு … Read more

iQoo 9 Series 5G: சும்மா கெத்தா வருது பாரு… Gimbal கேமரா, SD 8 Gen 1 சிப்செட் உடன் வெளியாகும் ஐக்யூ 9 சீரிஸ்!

பிளாக்‌ஷிப் தரத்தில், குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஐக்யூ நிறுவனம் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். தற்போது சீனாவில் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ 9 சீரிஸ் தொகுப்பு ஸ்மார்ட்போன்களை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் நிறுவனம் டீஸர் வெளியிட்டுள்ளது. இந்த ஐக்யூ 9 சீரிஸ் தொகுப்பில், ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 எஸ்இ ஆகிய மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் … Read more

போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளை போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன. … Read more

e-Passport: இ-பாஸ்போர்ட் என்றால் என்ன… காத்திருந்த காலம் எல்லாம் மாறிப்போச்சு!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டை வெளியிட்டார். அவர் பட்ஜெட் உரையில் இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு பல வசதிகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நேரத்தில் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, அதன் பயன்பாடு என்ன, சாதாரண பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இ-பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கான அனைத்து விடைகளையும் இந்த செய்தி … Read more

இந்தியாவில் பயன்பாட்டில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள்: 7-வது இடத்தில் தமிழகம்

புதுடெல்லி: இந்திய சாலைகளில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின்சார வாகன இணையதளத்தில் உள்ள தகவல் படி, தற்போது இந்திய சாலைகளில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டாம் கட்ட பேம் இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு … Read more

ஆன்லைன் பரிவர்த்தனையில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் சுமார் 100 கோடி டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட 1.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதோடு ரூ.4,000 கோடி அளவுக்கான வர்த்தகம் நடைபெற்றுவருவதாக சமீபத்தில் நடந்து முடிந்த சிஐஐ (CII) கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனையானது பலமடங்கு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துவருவதுபோலவே அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துவருகின்றன என்பதைப் பயன்பாட்டாளர்களான நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதற்குத் தீர்வு காணும் … Read more

oppo watch free: AMOLED திரை, புதிய ஸ்டைல், பெரிய பேட்டரி – சூப்பர் ஸ்டைல் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச்

ஒப்போ நிறுவனம் பிப்ரவரி 4ஆம் தேதி தனது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனுடன் தனது புதிய ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சையும் அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் சாதனங்கள் முன்னதாகவே சீன சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் (Oppo Watch Free) அமோலெட் (AMOLED) தொடுதிரையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் திரையின் அளவு 1.64″ அங்குலமாக உள்ளது. இது 280 x … Read more