உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா… மீண்டும் புதுபிப்பது எப்படி? – முழு விவரம் இதோ

RC Renewal For Bikes: நீங்கள் பைக் வாங்கி 15 வருடங்கள் ஆகப் போகிறது அல்லது நீங்கள் செகண்ட் ஹாண்டில் வாங்கிய பைக்கின் மாடல் 15 வருடங்களை எட்டப் போகிறது என்றால் இது உங்களுக்கான செய்திதான். நீங்கள் உடனே உங்களின் RC புக்கில் நீங்களின் RC காலாவதியாக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதை பாருங்கள். ஒருவேளை உங்கள் RC இன்னும் சில மாதங்களில் முடிவடையப் போகிறது என்றால் இந்த விஷயங்களை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.  … Read more

உச்சக்கட்ட குஷியில் ஆப்பிள் வெறியர்கள்… அறிமுகமானது iOS 18 – எந்தெந்த ஐபோன்களுக்கு கிடைக்கும்?

WWDC 2024 iOS 18 Latest News: ஆப்பிள் நிறுவனத்தின்  Worldwide Developers Conference (WWDC) என்ற மாநாட்டிற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் வழக்கத்திற்கு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அப்டேட்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் தகவல் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டின் WWDC மாநாட்டின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.  குறிப்பாக, iOS 18 குறித்த அறிவிப்புகள் இந்த WWDC மாநாட்டில் வெளியாகும் … Read more

நோக்கியா 3210 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம்: யுபிஐ பயன்படுத்தலாம்

சென்னை: இந்திய சந்தையில் புதிய ஃப்யூச்சர் போன் மாடலான நோக்கியா 3210 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம். இந்த போனில் யூடியூப் மற்றும் யுபிஐ போன்ற அம்சங்களை பயனர்கள் பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நோக்கியா 3210 4ஜி போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்திய ஃப்யூச்சர் … Read more

ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் போது ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!

ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை அதன் பேட்டரி. ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் சேதமடைவதாக பலர் அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செய்யும் தவறின் விளைவு தான் அது என்று பலருக்குத் தெரியாது. இதனால் அவரது ஸ்மார்ட்போன் விரைவில் பழுதடைகிறது. நீங்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் விலைமதிப்பற்ற ஸ்மார்ட்போன் விரைவில் பழுதடைந்து, அதை சரிசெய்ய ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்ய … Read more

Honda Activa-வை தூக்கிச்சாப்பிடும் புதிய EV ஸ்கூட்டர்… பவர்ஃபுல் Ather Rizta – சிறப்புகள் என்ன?

Ather Rizta Electric Scooter: இந்தியாவில் பைக் மற்றும் கார் போன்ற வாகனங்கள் மீதான மோகம் என்பது கட்டுப்படுத்தவே இயலாது எனலாம். சாதாரண அன்றாட தேவைகளுக்கான வாகனங்கள் முதல் சாகசம், விளையாட்டு சார்ந்த விலை உயர்ந்த வாகனங்கள் வரை அனைத்தும் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மாதாமாதம் அதன் விற்பனையும் அதிகரித்து வருகின்றன எனலாம்.  அந்த வகையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் சார்ந்த வாகனங்களுக்கு இருக்கும் அதே மவுசு தற்போது எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களும் … Read more

பட்ஜெட் டைட்டா இருக்கா… ரூ.15 ஆயிரத்திற்குள் நச்சுனு வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் – டாப் 3 மாடல்கள்!

Smartphones Under Rs.15,000 For College Students: மொபைல் வைத்திருப்பது இருப்பது அவசியமாகிவிட்டது. அதே வேளையில் மாதாமாதம் புது புது அப்டேட்களுடனும், அம்சங்களுடனும் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தில் ஒருவர் சராசரியாக ஒரு மொபைலை இரண்டு ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவார்கள். அதன்பின்னரும், அந்த மொபைல் அவர்களின் தாய், தந்தைக்கோ அல்லது வேறு யாருக்காவது கைமாறுமே தவிர மொபைல் பயன்பாட்டில்தான் இருக்கும்.  அப்படியிருக்கும் சூழலில், சிலர் தற்போது புதிய மொபைல்களை வாங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். … Read more

இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு கிரீன் சிக்னல்!

கொழும்பு: இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது அந்த நாட்டு அரசு. இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இது தேசத்தில் இணைய புரட்சியை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். இதன் அதிவேக இணைய சேவை மூலம் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கல்வி சார்ந்த முன்னேற்றங்களை … Read more

Vodafone Idea : 70 நாட்கள் நெட்பிளிக்ஸ் இலவசம்! இப்படியொரு பிளான் கேள்விபட்டிருக்கீங்களா?

Vodafone Idea Data Plan: இந்தியாவின் மூன்றாவது பெரிய Telecom நிறுவனமான Vodafone Idea தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா உலகளவில் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஏற்கனவே ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தா இருக்கும் நிலையில், போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தான் இந்த திட்டங்கள் கிடைக்க இருக்கிறது. வோடபோன் ஐடியா புதிய திட்டம் இரண்டு நிறுவனங்களின் … Read more

தினமும் 2ஜிபி… ஆண்டு முழுவதும் இலவசம் – அள்ளிக்கொடுக்கும் ஜியோ

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. நீங்கள் மாதாந்திர திட்டத்தை எடுத்துக் கொண்டால், ஒரு மாதத்தில் 28 முதல் 30 நாட்கள் செல்லுபடியாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் ஒரு வருடம் முழுவதும் இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கொண்டால் உங்களுக்கு அடிக்கடி ரீச்சார்ஜ் செய்ய … Read more

மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா…? டாப் 5 நிறுவனங்கள்

Car Sales In May 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தை என்பது மாதாமாதம் உயர்வை கண்டுவரும் ஒன்றாகும். கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை இதில் முதன்மை பெறும். கார் விற்பனையை  எடுத்துக்கொண்டோமானால் ஆண்டு வாரியாகவும், மாதம் வாரியாகவும் உயர்வைதான் கண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதாவது, இந்தியாவில் மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகின. அதில் எந்த நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது, டாப் 5 … Read more