உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!

சென்னையைச் சேர்ந்த EV ஸ்டார்ட் அப் நிறுவனமான Raptee.HV இன்று இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலகின் முதல் வகை மின்சார மோட்டார் சைக்கிள் இது என்று சொல்லலாம். அதுமட்டுமல்ல, இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த வெப்பத்துடன் கூடிய சிறந்த செயல்திறனை வழங்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இந்த மின்சார மோட்டார் சைக்கிள்,மின்சார கார்களுக்குப் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் … Read more

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம் – வீடியோ வைரல்!

வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.13) மாலை 5.54 மணியளவில் அந்நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் … Read more

முதலீடு செய்தா நல்ல லாபம் கிடைக்குமா? ஐடியா கொடுக்க இந்த செயலிகள் இருக்க கவலையேன்?

பணம் சம்பாதிப்பதற்கு விழி பிதுங்கும் நிலையில், வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதும் அதில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நமக்கு முதலீடு செய்வது என்பது சிரமம் என்றாலும், செய்யும் சிறிய முதலீட்டையும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப புரட்சி, முதலீட்டு யோசனைகளை சொல்வதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பங்குச் … Read more

ஏலியன்கள் இருப்பது உண்மை தான்… ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!

Proof Of Aliens Existance  : புத்திசாலியான வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளை பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் நாசாவுடன் தொடர்புடைய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார். சைமன் ஹாலண்ட் & வேற்றுகிரகவாசி திரைப்படத் தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட், பிபிசி மற்றும் நாசா நிதியுதவி திட்டங்களுக்கான ஆவணப்படங்களில் பணிபுரிந்தவர். இவர், ஏலியன்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தில், வேற்று கிரக … Read more

மேம்படுத்தப்பட்ட JioFinance செயலி! கிடுகிடுவென உயரும் பயனர்களின் எண்ணிக்கை! அப்படியென்ன சிறப்பு?

முகேஷ் அம்பானி JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தினார். ரிலையன்ஸின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்) சமீபத்தில் அதன் ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் இந்த செயலி தற்போது மேம்படுத்தப்பட்ட செயலியாக களம் இறங்குகிறது.   முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் UPI வசதி இருப்பதால், கட்டணங்கள் செலுத்த வசதியாக இருக்கும். நாட்டின் பிரபல தொழிலதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி, மற்ற துறைகளைப் போலவே நிதித்துறையிலும் … Read more

எந்தப் பணியையும் செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோ அறிமுகம்

கலிபோர்னியா: டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரோபோக் களால் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். இந்த மனித ரோபோக்கள் குறித்து டெஸ்லோ நிறுவன சிஇஓ எலான் மஸ்க் கூறியதாவது: இந்த மனித ரோபோக்களால், நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடன மாட முடியும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடி யும். நாய்களை நடைபயிற்சி அழைத்து செல்ல முடியும், தோட்ட … Read more

டிஜிட்டல் டைரி 15: இணையவாசிகளால் பாடம் கற்ற பிரபல யூடியூபர்!

பிரபல யூடியூபர் மார்கஸ் பிரவுன்லீக்கு (Marques Brownlee) அறிமுகம் தேவையில்லை. ‘MKBHD’ என்ற பெயராலும் அறியப்படுபவர். இணையவாசிகளால் அதிகம் அறியப்படும் தொழில்நுட்ப விமர்சகர். யூடியூப்பில் 1.9 கோடிப் பேர் பிரவுன்லீயைப் பின் தொடர்கின்றனர். புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்ப சாதனங்களை விமர்சனம் செய்வதில் வல்லவர். பிரவுன்லீயின் விமர்சன வீச்சுக்கு உதாரணமாக, ‘ஹியூமனே’ (Humane AI Pin) படைப்பின் விமர்சனத்தைக் கூறலாம். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட இந்தச் சாதனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஏஐ வருகையால் … Read more

இந்தியாவில் ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகம்! PhonePe, Paytmக்கு கடும் போட்டி!

PhonePe மற்றும் Paytm போன்ற பிற பயன்பாடுகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் JioFinance செயலியை, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) உருவாக்கியுள்ளது. வெவ்வேறு பில்களைச் செலுத்துவதோடு, UPI பரிவர்த்தனைகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளைத் தொடங்க இந்த செயலி உதவும். இந்த செயலியின் பீட்டா பதிப்பை ஜியோ மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு Google Play Store மற்றும் Apple App Store இரண்டிலும் கிடைக்கிறது. MyJio இயங்குதளம் மூலமாகவும் இந்த செயலியை தரவிறக்கம் … Read more

டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன?

Tesla Cybercab Before 2027 : டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சைபர்கேப் (Cybercab) ரோபோடாக்ஸியை வெளியிட்டார். இந்த ரோபோடாக்ஸியின் விலை 30,000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று மஸ்க் உறுதியளித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ரோபோடாக்ஸி அறிமுக நிகழ்ச்சி கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் We Robot நிகழ்வில் இந்த ரோபோடாக்ஸி அறிமுகம் … Read more

தீபாவளியில் இரு சக்கர வாகனங்களை வாங்கினால் அதிரடி தள்ளுபடி! 40000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வேண்டுமா?

விழாக்களும் பண்டிகைகளும் களைக்கட்டியுள்ள இந்த பண்டிகை காலத்தில், பஜாஜ், OLA, TVS, Hero மற்றும் Ather போன்ற முன்னணி ஸ்கூட்டர் உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார ஸ்கூட்டர் வரிசைகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குகின்றனர். விலைகள் குறைக்கப்பட்டு, கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூடுதல் பலன்களுடன், மலிவு விலையில் ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வர இதுவே சரியான நேரம், பயன்படுத்திக்கொள்ள நீங்கள் ரெடியா? எந்த வாகனத்திற்கு எவ்வளவு தள்ளுபடி தெரிந்துக் கொள்வோம். TVS iQube – ரூ … Read more