டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன?

Tesla Cybercab Before 2027 : டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சைபர்கேப் (Cybercab) ரோபோடாக்ஸியை வெளியிட்டார். இந்த ரோபோடாக்ஸியின் விலை 30,000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று மஸ்க் உறுதியளித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ரோபோடாக்ஸி அறிமுக நிகழ்ச்சி கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் We Robot நிகழ்வில் இந்த ரோபோடாக்ஸி அறிமுகம் … Read more

தீபாவளியில் இரு சக்கர வாகனங்களை வாங்கினால் அதிரடி தள்ளுபடி! 40000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வேண்டுமா?

விழாக்களும் பண்டிகைகளும் களைக்கட்டியுள்ள இந்த பண்டிகை காலத்தில், பஜாஜ், OLA, TVS, Hero மற்றும் Ather போன்ற முன்னணி ஸ்கூட்டர் உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார ஸ்கூட்டர் வரிசைகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குகின்றனர். விலைகள் குறைக்கப்பட்டு, கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூடுதல் பலன்களுடன், மலிவு விலையில் ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வர இதுவே சரியான நேரம், பயன்படுத்திக்கொள்ள நீங்கள் ரெடியா? எந்த வாகனத்திற்கு எவ்வளவு தள்ளுபடி தெரிந்துக் கொள்வோம். TVS iQube – ரூ … Read more

Mozilla பயபடுத்துபவர்களுக்கு தரவு பாதுகாப்பு பிரச்சனை! அரசு சொல்லும் அதிரடி அலர்ட்! சைபர் எச்சரிக்கை…

CERT-In Alerts Mozilla Firefox Users : Mozilla பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அரசு, மோர்ஜிலா சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம். எனவே, உங்கள் பயர்பாக்ஸ் உலாவியை உடனடியாக புதுப்பிப்பது நல்லது என அரசு அறிவுறுத்தியுள்ளது.   CERT-In எச்சரிக்கை இந்தியாவின் கணினி பாதுகாப்பு நிறுவனமான CERT-In, Mozilla Firefox உலாவியைப் பயன்படுத்தும் இணைய பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In, Mozilla Firefox … Read more

விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் நிகழும் வெடிப்புகள்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

சென்னை: அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் நாசா மையம் சார்பில் சந்திரா விண்கலம் 1999-ம் ஆண்டு ஏவப்பட்டது. இவ்விரு தொலைநோக்கி கலன்களும் விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே … Read more

அசால்டா டாடா எஸ்யூவி கர்வ் கார் வாங்கலாம்… ஆனா உங்க சம்பளம் எவ்வளவு இருக்கனும்? தெரிஞ்சுக்கோங்க!

Tata Curvv EV: இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. அதை சமன் செய்யும் வகையில் எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பட்ஜெட் கார்கள் முதல் ஆடம்பர கார்கள் என பல்வேறு விலைகளில் மின்சார கார்கள் அறிமுகமாகிவருகின்றன. டாடாவின் கர்வ் டாடா மோட்டர்ஸ் (Tata Motors) தனது புதிய மின்சார SUV Tata Curve EV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் … Read more

ஸ்விக்கி இன்ஸ்டாமார்டுக்கு போட்டியாக வரும் ஜியோமார்ட்… 1,150 சிறிய நகரங்களில் விரைவில் சேவை

ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்குவது மட்டுமல்லாமல், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால், உள்ளிட தினசரி தேவைகளுக்கான பல பொருட்களை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். கடைக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கும் பழக்கம் குறைந்து வருகிறது.  பல ஆன்லைன் தளங்கள் தினசரி தேவைக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இதில் க்விக் காமர்ஸ் சேவை வழங்கும் சொமேட்டோவின் பிளின்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பேஸ்கெட், செப்டோ ஆகியவை … Read more

டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் இவர் தானா… யார் அந்த நோயல் டாடா…

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். இந்த வார தொடக்கத்தில் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு,  ரத்தன் டாடா இறந்துவிட்டதாக டாடா நிறுவனம் அறிவித்தது. ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்ததுள்ளது. டாடா நிறுவனத்தின் அடுத்த தலைவர் என்று யூகிக்கப்படுபவர்களில் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவும் … Read more

பிளிப்கார்ட் சலுகை விற்பனை பிரிட்ஜ் முதல் ஸ்மார்ட்போன் வரை… மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனைக்குப் பிறகு, மீண்டும் பிளிப்கார்ட் ( Flipkart) பிக் ஷாப்பிங் உத்சவ் என்னும் சலுகை விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையின் போது, ​​புதிய போன்கள், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிரீமியம் இயர்போன்கள் போன்ற ஸ்மார்ட் கேஜெட்டுகள் மிக மலிவான விலையில் கிடைக்கும். பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனை தேதி அக்டோபர் 9 ஆம் … Read more

சைபர் கிரைம் ஆசாமிகள் பயன்படுத்தும் டெக்னிக் இவை தான்… எச்சரிக்கும் போலீஸார்

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி விட்டாலும், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடிப்பட்டு  சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் காண்கிறோம். இந்நிலையில் தில்லி போலீஸார் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். சைபர் குற்றவாளிகள் மக்களை பல வழிகளில் ஏமாற்றி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் … Read more

இந்தியாவின் முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை … Read more