எல்பிடிய பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சி நிகழ்வு

எல்பிடிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிகளுக்கான தெளிவுபடுத்தல் பயிற்சி நிகழ்வொன்று காலி வக்வெல்ல தென்மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (10) தென்மாகாண ஆளுநர் எம். கே. பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம்பெற்றது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை

பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாத்தளை விவசாயிகளுக்கு 642 தொன் உரம்

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆழுP உரம் 365 தொன் தற்போது கிடைத்துள்ளதாக மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் பி.என்.சி.எச். குமாரிஹாமி தெரிவித்துள்ளார் என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

ஜனாதிபதி நாடு திரும்பினார்

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் … Read more

அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் ஈ சொனெக், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருடன் அமெரிக்கத் தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ் மற்றும் அரசியல் அதிகாரி கெவின் பிரைஸ் ஆகியோரும் உடனிருந்தனர். வருகை தந்த அமெரிக்க தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்ற மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அவர்களுடன் பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்கள் தொடர்பான சுமுகமான கலந்துரையாடலில் … Read more

பொதுமக்கள் தினத்தில் ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர் குடும்பங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு அமைச்சு கவனம் 

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தின நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 17) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் … Read more

ரத்துகலை பழங்குடித் தலைவர் மற்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு இடையில் சந்திப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சகத்தில் கடந்த 16ஆம் திகதி ரத்துகலை பழங்குடித் தலைவர் அமைச்சர் சமந்த வித்யாரத்னவை சந்தித்தார். இதன்போது பிபிலை மற்றும் அம்பாறை பிரதேசங்களுக்கு இடையே அமைந்துள்ள ரத்துகலை பழங்குடி கிராமத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ரத்துகலை பழங்குடி தலைவர் அமைச்சரிடம் தெளிவு படுத்தினார். இதில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பதாக ரத்துகலை பழங்குடித் தலைவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ரத்துகலை … Read more

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவி  கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களுக்கு

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக கௌரவ கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று (18) சபையில் … Read more