விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினம் தொடர்பான அறிவித்தல்

விவசாயம், கால்நடை வளங்கள். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கட்கிழமை விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் முற்பகல் 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை நடாத்தப்படும். அதற்கமைய, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டீ.லால்காந்த அவர்கள், விவசாயம், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் சுருணாரத்ன அவர்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் மருத்துவ … Read more

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230 பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை –ஜனாதிபதி தெரிவிப்பு வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபாய் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபாய் சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபா.சில்லறை விலை 240 ரூபா கீறி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா – அரிசி … Read more

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்.*  – தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான  ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவிப்பு  தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான  ஐக்கிய அமெரிக்காவின் … Read more

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   கடந்த சில வருடங்களாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்காக சரியான கவனம் செலுத்தப்படவில்லை. எமது நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றின் … Read more

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவிப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான  ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald lu) தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பு … Read more

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் ஒன்றிணைவோம்

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவை. இவை சித்திரக் கதைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை! – பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி … Read more

பண்டிகை காலத்தில் சந்தையில் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதியில்லை – வர்த்தக அமைச்சர் 

பண்டிகை காலத்தில் சந்தையில் பொருட்களின் விலைகளை  அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க மாட.டோம் என்று வர்த்தக, வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (06)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்காக முன் வக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சந்தையில் அதிகரித்துள்ள, இலாபமீட்டும் மாபியாக்களை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது … Read more

ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வர்த்தக விளம்பரங்களில் பயன்படுத்துவதற்குத் தடை

ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுணி தெரிவித்தார். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு சகல நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (06) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர்;  கடந்த அரசாங்கங்களில் ஏழு, எட்டு வருடங்கள் வரை பின்தள்ளி போடப்பட்டதாகவும், நாங்கள் இதனை பிற்போடாது … Read more

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,4,5,6 இலான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ கற்று சித்தியடையாத மாணவர்களும்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ கற்ற மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. * இக்கற்கை நெறியை பயிலும்‌ மாணவர்களுக்கு மாதாந்தம்‌ 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில்‌ உதவித்தொகை வழங்கப்படும்‌. * மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன்‌ ரிக்கட்‌ … Read more

கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. இதன்படி, இந்த … Read more