எதிர்வரும் பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த நிதி அமைச்சர் பசில்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Source link