மடவளையில் மண்சரிவு! மூவர் பலி

வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.   மேலும், குறித்த விபத்தில் சிக்குண்ட  ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்மேடு சரிந்து வீடொன்றின் மேல் வீழ்ந்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    Source link

பயிலுனர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு

பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவை, மாகாண சேவை மற்றும்  நிறுவகங்களில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுவரை நிரந்தர நியமனங்கள் கிடைக்கபெறாத பயிலுனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உரிய சேவை நிலையங்களினால் செய்யப்படும் அழைப்புக்களுக்கு இணங்க சேவை நிலையங்களுக்கு பயிலுனர்களை சமூகமளிக்குமாறு செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

யாழ். பல்கலைகழக மாணவிகள் இருவருக்கிடையில் மோதல்!

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Source link

5,000 ரூபா கொடுப்பனவுக்கு உரித்தானவர்கள்

நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த உத்தியோகத்தர்களுக்கும், நாளாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என 03/2022 அரசாங்க நிர்வாக சுட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு: 

பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  Source link

65 மில்லியன் ரூபா செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, முதலைக்குடா மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினை ,பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று (07) … Read more

வெளிநாட்டவர்களுக்காக இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கோவிட் காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய … Read more

லங்கா சதொச மூலம் 998 ரூபாவிற்கு புதிய நிவாரண பொதி

லங்கா சதொச ஊடாக ஐந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாட்டரிசி, 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்திலி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் ஆகியன … Read more

திடீரென நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை (செய்திப் பார்வை)

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 183ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய … Read more

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போக உற்பத்தியில் ; முப்பது வீதமான பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த சில தினங்களில் அரசாங்கம் 50 லட்சம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.