கோர விபத்து: பரிதாபமாக பலியான சிறுவன் – குழந்தை உட்பட மூவர் படுகாயம் (PHOTO)

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர். ஓலைத்தொடுவாய் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று திரும்பிய போது பின்புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக வந்த மீன் ஏற்றும் கூலர் வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியும், அதில் பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது 30), மகன்களான கெபின் கரன் (வயது … Read more

இலங்கை மக்களுக்கு விரைவில் ஏற்படப் போகும் பாரிய நெருக்கடி நிலை

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர்  பற்றாக்குறையால் குறித்த இக்கட்டான நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.   துறைமுகத்தில், 500 அரிசி கொள்கலன்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் டொலர் நெருக்கடியின் காரமணாக  சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  குறித்த கொள்கலன்களில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருக்கின்றன. இந்த கொள்கலன்களை, விடுவிக்க முடியாமல் போனால் சந்தையில் அத்தியாவசிய … Read more

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நீர் நிலைகளில் நீராடச் செல்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல் மற்றும் நீரில் இறங்குவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உயிர் காப்பு ஒன்றியத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை பற்றி தெரியாதவர்கள் நீந்துவதன் மூலமான விபத்துக்களே அதிகளவில் பதிவாகி வருகின்றது என ஒன்றியத்தின் தலைவர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கும் நபர் ஒருவரை நீச்சல் தெரியாதவர்கள் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளினால் அதிகளவு மரணங்கள் பதிவாகி வருவதாக அவர் … Read more

முக்கியஸ்தர் ஒருவரின் பதவியை பறிக்கத் தயாராகும் கோட்டாபய?

ராகம மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு வாகனங்களை வழங்கியதாக கூறப்படும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்கவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன், அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி ராகம … Read more

இலங்கையில் 10 நாட்களில் 222 கோவிட் மரணங்கள்

இலங்கையில் கடந்த 26ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான 10 நாட்களுக்குள் 222 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 10 நாட்களில் 10,651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடின் தன்மைக்கமைய, சமூகத்தில் நோய் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுடைய கோவிட் நோயாளிகள் இருக்கலாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தயர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றாளர்கள் … Read more

இலங்கையில் 3 பேரின் உயிரை பறித்த Youtube வீடியோ

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மூவரும் சென்றுள்ளனர். மாத்தறையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் … Read more

திடீரென மயங்கி வீழ்ந்து இளைஞரொருவர் மரணம் (Photos)

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் … Read more

13 ஆம் திருத்த சட்டம் தேவை தானா?

Courtesy: கட்டுரையாசிரியர் – தி. திபாகரன் இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை கிடையாது. தமிழர்களுடைய பிரச்சினை பொருளாதார பிரச்சினை மட்டும்தான். அதனை வருகின்ற புதிய அரசியல் யாப்பின் ஊடாக உறுதி செய்து பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்து விடுவோம்” என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதிலிருந்து இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது. அந்த அடிப்படையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினால் இலங்கை … Read more

ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு முகவர்களால் புதிய நெருக்கடி

எமது மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையிலே இருக்கின்ற உறவு சிதைந்து விடக்கூடாது, இது வெறுமனே தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். தமிழக மீனவர்களுக்கும், எமது மீனவர்களுக்கும் இடையிலான உறவு கசந்து போகுமாக இருந்தால் நிச்சயமாக ஒட்டு மொத்த தமிழக உறவுகளையும் நாங்கள் பகைக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து … Read more

யாழ். மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூவர் கைது

ஓட்டை உடைத்து வீடு புகுந்து வாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்கும் கும்பல் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் தாம் கொண்டு வந்த கூரிய வாளைகே காட்டி மிரட்டி மூன்றரைப் பவுண் நகையையும், சி.சி.ரி.வியையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பில் … Read more