வங்குரோத்து அடைந்து விட்ட பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை மின்சார சபை உட்பட பல அரச நிறுவனங்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாத காரணத்தினால், கூட்டுத்தாபனம் வங்குரோத்து அடைந்து விட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை எதிர்காலத்தில் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால்,அதற்கு எதிராக மிகப் பெரிய தொழிற்சங்க போராட்டத்தில் இறங்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத்தள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் … Read more

ஐரோப்பிய நாடொன்றிக்கு செல்ல முயற்சித்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே, குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் … Read more

அனைத்து குற்றங்களுக்கும் அருந்திகவே முன்னோடி:உடுவே தம்மாலோக்க தேரர்

ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka Thero) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள்,மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை. அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். … Read more

இரகசியமாக கூடிய எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் அண்மையில் மிக இரகசியமான முறையில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக எதிர்வரும் 10 ஆம் திகதியும் இரகசிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. இந்த இரகசிய பேச்சுவார்த்தையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் … Read more

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து பிரதமர் கூறியுள்ள விடயம்

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிங்கள நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைய கைதிகளை விடுதலை செய்வது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டியள்ளார். இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் … Read more

இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து இராஜாங்க அமைச்சரின் தகவல்

இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தகவல் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டும் வரும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  இதன்போது மேலும் தெரிவிக்கையில்,  தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதோடு பூஸ்டர் … Read more

பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல் (PHOTO)

இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்

அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் பென்டகனில் நுழைந்த கோழியை பாதுகாப்பு ஊழியர் பிடித்து காவலில் அடைத்தனர். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிற்கும். இந்த நிலையில் சோர்வான கோழி என்று பென்டகனுக்குள் நுழைந்து பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்பட, பாதுகாப்பு ஊழியர்கள் அதை பிடித்து காவலில் அடைத்தனர். உள்ளூர் விலங்குகள் ஆர்வல அமைப்பு கூறுகையில் ‘‘பிடிப்பட்ட கோழி திங்கட்கிழமை காலை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் … Read more

ராகம மருத்துவ பீட விவகாரம்! ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாட்டிற்கு கிடைத்த பாராட்டு

ராகம மருத்துவ பீட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட விதத்தை  முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராட்டியுள்ளார். ராகம மருத்துவ பீட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதன்போது, தவறு செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வண.உடுவே தம்மாலோக தேரர், பிள்ளைகளின் தவறுகளுக்கு பெற்றோர்கள் நட்டஈடு … Read more

உயிருக்கு போராடி சிகிச்சையின் பின் முன்னேறி வரும் இலங்கை தமிழ் சிறுமி

லண்டனில் புற்றுநோயுடன் போராடும், இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுமியின் பெற்றோருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் பிரபல கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் அளித்து வருகிறார். கால்பந்து நட்சத்திரமாக ஆஷ்லே மற்றும் காதலி சபியா வோராஜீ ஆகியோர் தங்கள் பெண் குழந்தை உயிரிழந்ததிலிருந்து பல நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தம்பதியின் அன்பான குழந்தை அசேலியா கடந்த ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயான லுகேமியாவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார். லண்டனின் கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் இதே … Read more