முகம்மது சாலி நழீம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்

கௌரவ முகம்மது சாலி நழீம் அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக கௌரவ முகம்மது சாலி நழீம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் … Read more

டெங்குக் கட்டுப்பாட்டிற்கு சுகாதார அமைச்சினால் வேலைத் திட்டமொன்று ஆரம்பம் – அமைச்சரவைப் பேச்சாளர்

வெள்ள நீர் முழுமையாக வற்றியதும் டெங்குக் கட்டுப்பாட்டிற்கான வேலைத் திட்டமொன்றை சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவும் அபாயம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அது குறித்து அமைச்சு நடவடிக்கை எடுக்கதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலையான வேலைத் … Read more

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (04) பி.ப 9.30 மணி வரை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளைய தினம் (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் … Read more

அபிவிருத்தி உத்தியோகத்தரகளின் போராட்டத்திற்கு எதிராக பொலிஸாரை ஈடுபடுத்தவில்லை – பிரதமர் 

கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் ஈடுபடுத்தப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (03) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முழு அரச சேவையிலும் எந்த திட்டமும் இன்றி அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து குழுக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் தலையிடும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. கடந்த அரசாங்கங்களினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு போதும் அவர்களது போராட்டத்திற்கு பொலிஸாரை ஈடுபடுத்தவில்லை. அப்போது அங்குள்ள … Read more

அஸ்வெசும உரித்துடைய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பாடசாலை எழுதுகருவிகளை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவு

அஸ்வெவும நலன்புரி உதவிகளைப் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை எழுதுகருவிகளை பெற்றுக் கொள்வதற்காக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக ஒரு குழந்தைக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அஸ்வெசும நலன்பரி … Read more

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெறும் குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் நலன்புரி நன்மைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து … Read more

இனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த இடமளியோம் – அமைச்சரவை பேச்சாளர்

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் … Read more

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க நியமனம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2014.01.01ஆம் திகதியன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து, 2020.01.01ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராகவும், 2024.01.01ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். மேலும் அவர், திருக்கோணமலை, வவுனியா ஆகிய பிரிவுகளிலும், பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரிவின் பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் நட்புறவுப் பிரிவின் பதில் பணிப்பாளராகவும், சட்டப் … Read more

சிலாபம் புகையிரதப் பாதையினூடாக பயணிக்கும் புகையிரத சேவை சீரமைக்கப்பட்டுள்ளது

சிலாபம் புகையிரதப் பாதையினூடாக பயணிக்கும் புகையிரத சேவை சீரமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே துணைப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் இன்று (03) அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் புகையிரதப் பாதையில் இன்று காலை புகையிரதப் போக்குவரத்து தடைபட்டடிருந்ததைத் தொடர்ந்தே இந்த ரயில் சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.