க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) 2024(2025) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் 2024.11.05 ஆம் திகதி முதல் 2024.11.30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் கோரப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக விண்ணப்ப முடிவுத்திகதி 2024 டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படின், பின்வரும் தொடர்பு இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளமுடியும் என்றும் … Read more

ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 

தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலைகளில் மக்களுக்கு தொடர்ச்சியாக அரிசி விநியோகிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். … Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட  குழுவின் அறிக்கை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, அண்மையில் பல பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவுடன் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளும்போது போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் … Read more

டெங்கு கட்டுப்பாட்டுக்கு கியூபா அரசு ஆதரவு 

அவ்வப்போது தலைதூக்கும் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள வேலை திட்டத்தினுள், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கு, நுளம்புக் குடம்பி பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் முறையான மருத்துவப் பாவனை போன்ற விடயங்கள் தொடர்பாக கியூபா அரசின் நிபுணத்துவம், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் அனுபவத்தை நேரடியாகப் பயன்படுத்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தீர்மானித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales … Read more

பாராளுமன்றம் நாளை (03) கூடவுள்ளது 

பாராளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறும்.

புதிய பிரதம நீதியரசராக  முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்தார் 

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து  பெர்னாண்டோ வரலாற்றில் இணைகிறார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமானபதவிக்கு அவரது பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் … Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல அவர்களை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்கேற்றிருந்தார். இந்த சந்திப்பில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நீண்டகாலமாகக் காணப்படும் தொடர்பை நினைவுகூர்ந்தார். மேலும், இரண்டு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாக இந்திய … Read more

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியினர் அபார வெற்றி 

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (01) இடம்பெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் 131 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டினர்.  நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர், அனைவரும் ஆட்டமிழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.   இலங்கை இன்னிங்ஸை பலப்படுத்திய சரூஜன் சண்முகநாதன் 132 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களைப் … Read more

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 டிசம்பர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய … Read more