உரிமைகளைப் பாதுகாப்பும்  –  எய்ட்ஸை ஒழிப்போம்

36வது எயிட்ஸ் தின, தேசிய கொண்டாட்டம் இன்று (01) கொழும்பு காலி முகத்திடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்  மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. “உரிமைகளைப் பாதுகாப்பும்  –  எய்ட்ஸை ஒழிப்போம்” என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாகும். இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நடைப்பயணத்தின் … Read more

விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் தினத்தை பிரச்சாரம் செய்து பொதுமக்களை அமைதியின்மைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது – குற்றப் புலனாய்வு திணைக்களம்

நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முகநூல் ஒன்றினூடாக வெளியிடப்பட்டமை, மற்றும் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தின கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நினைவேந்தல் தினம் என்று வெளிப்படுத்தி, முகநூல் வழியாக வதந்திகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது … Read more

மல்வத்து ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், வெள்ள அபாய நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுமிடத்து, அதுதொடர்பான முன் அறிவிப்புகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் … Read more

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் நேற்று (30) பார்வையிட்டார். நாட்டின் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 155 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடமான மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் சேதமடைந்துள்ளது.  இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றார் . சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்ட … Read more

கடும் மழையினால் சேதமடைந்த மனம்பிட்டி – அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவு

கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்க அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இரவு பகலாக இடைவிடாது உழைத்து சேதமடைந்த, மனம்பிட்டி – அரலகங்வில (B-502) வீதியில் 19/1 பாலத்திற்குப் பதிலாக தற்காலிக இரும்புப் பாலத்தை விரைவாக நிர்மாணித்தனர். அதன்படி நேற்று (30) காலை முதல் அப் பாலம் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. பொதுவாக 15 நாட்கள் வரை எடுக்கும் இப்பணி, பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்டத்திற்கு வெள்ள நிலைமைகள் தொடர்பாகக் கண்காணிப்பு விஜயம்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் மற்றும் தற்போதைய அவசர நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கான கள விஜயம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (30) மேற்கொண்டார். இதன் போது ஆளுநர், கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு விநியோகிக்குமாறு, அம்பாறை மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைத்தார். … Read more

இலங்கையின் பல இடங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 30ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (FENGAL) பெஞ்சல் சூறாவளி நேற்றிரவு (29) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது மேற்கு திசை ஊடாக, வடமேல் திசை நோக்கி நகர்ந்து இன்று … Read more

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி புணரமைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி(மருதங்கேணி பளை சுனாமி அபாய வெளியேற்றபாதை) புணரமைக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் சேதத்துக்கு உள்ளாகவிருந்த நிலையில் குறித்த பாதையின் இரு பக்கமும் மண் மூடைகள் அடுக்கப்பட்டு குறித்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களம், பளை பிரதேச சபை மற்றும் பலாலி பாதுகாப்பு படை தரப்பினர் அடங்கிய குழுவினரின் ஒத்துழைப்புடன் குறித்த வீதி இவ்வாறு சீரமைக்கப்பட்டது. அனர்த்த காலத்தில் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு அரசாங்க அதிபரினால் உதவி!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது மேலதிக அரசாங்க அதிபார் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் … Read more

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை