திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

யாழ்ப்பாணத்தில் வெள்ள  அனர்த்த நிலைமைகள்    தொடர்பான விசேட கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட  கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர்   தலைமையில் நேற்றைய தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா்  கூடத்தில்  நடைபெற்றது. இவ் விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் தூயகொந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதே … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் திரு. காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சேவையாற்றும் திறமையான மற்றும் நிபுணத்துவமிக்க இலங்கையர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார். தூதரகத்தின் இரண்டாவது … Read more

தென்னாபிரிக்க அணி 281ஓட்டங்களால் முன்னிலை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (28) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய  தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளுக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.   அதன்படி, தென்னாபிரிக்கா அணி 281 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ள அணித்தலைவர் டெம்பா பவுமா 24 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.   தென்னாப்பிரிக்கா அணி சார்பில் … Read more

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வட்டுவாகல் பாலத்தின் நிலை தொடர்பில் ஆராய நேரடி கள விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியின் இணைப்பாக இருக்கின்ற வட்டுவாகல்பாலம் நீட்டகாலமாக பழுதடைந்த நிலையில் மீள் நிர்மாணிக்கப்படாமையினால் முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான போக்குவரத்துக்கு இடையிடையே தடை ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற பயணமாகவும் அமைந்துள்ளது. வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க குறித்த பாலத்தை இன்றையதினம் (29) பி.ப 1.00 மணியளவில் நேரடியாக சென்று  பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.  மிகப் பழமையான வட்டுவாகல் பாலம் மழை காலத்தில் நந்திக்கடல் முகத்துவாரத்தின் இணைப்புடன் … Read more

அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்

நாட்டின் தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ. எஸ்.எம்.சியாத், … Read more

கடலில் பயணம் செய்வேர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 29ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 28ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 240 கிலோ மீற்றர் தூரத்திலும் காங்கேசந்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 290 கிலோ … Read more

தூதுவர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர் 

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.  அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), பெலரூஸ் குடியரசு (The Republic of Belarus), ஆர்மேனியா குடியரசு (The Republic of Armenia), ஸ்பானிய குடியரசு (The Kingdom … Read more

அனர்த்த நிவாரண பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அம்பாறை விஜயம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (நவம்பர் 28) அங்கு விஜயமொன்றை மேட்கொண்டார். அம்பாறை மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) அதிகாரிகள், சிரேஷ்ட அரச மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான … Read more

இராணுவத் தளபதியுடன் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் 2024 நவம்பர் 27 அன்று மன்னாரில் நிலவும் சீரற்ற காலநிலையை அவதானிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மாநாடு ஒன்று மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் … Read more