பிரிவினைகளற்ற “இலங்கையர்கள்” எனும் நோக்குடன் செயல்படும் நாடாக எதிர்காலத்தில் விளங்க முடியும் – தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதி அமைச்சர்

“பிரிவினைகள் இன்றி” “இலங்கையர்கள்” எனும் நோக்குடன் செயல்படும் நாடாக எதிர்காலத்தில் விளங்க முடியும் என்றும், வளமான நாட்டில் அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதி அமைச்சர் முஹம்மது முனீர் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அலுவலகத்தில் இன்று (28) தமது பிரதி அமைச்சர் பதவிக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய சமாதானத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் பாதிப்புக்கள் … Read more

வாகனங்களில் தற்காலிக இலக்கத் தகடுகளின் பயன்பாடு 2024 டிசம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடையும்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் விநியோகிப்பது தொடர்பாக காணப்பட்ட சிக்கல் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மீண்டும் வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாம், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தி, இதுவரை பெற்றுக் கொள்ளாதிருப்பின், தங்களின் இலக்க வாகனத் தகட்டை 2024 டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், … Read more

நடைபெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்ட திகதிகள்

அசாதாரண காலநிலை காரணமாக நவம்பர் மாதம் 27, 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் டிசம்பர் மாதம் 02 மற்றும் 03ஆம் திகதிகளிலும் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சைகள் இந் நாட்களில் நடைபெறமாட்டாது. அதற்கமைய 3, ,4, 5, 6, 7, 8ஆம் திகதிகள் நடைபெறவிருந்த பரீட்சைகள் முறையே டிசம்பர் மாதம் 21, 23 ,27, 28, 30, 31 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (28) … Read more

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

2025 இல் திறக்கப்படவுள்ள 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு இலங்கையின் வறுமையை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்,பொருளாதார அபிவிருத்தி குறித்து அவதானம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார துறைகளை மேம்படுத்துவது குறித்து கவனம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் … Read more

யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 28) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிட்டடார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் … Read more

பிரதி பாதுகாப்பு அமைச்சர் கடமை பொறுப்பேற்பு 

மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பிரதி பாதுகாப்பு அமைச்சராக (25 நவம்பர் 2024)  நேற்றைய தினம் கொழும்பு – 07, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.  நிகழ்வின் போது, அதிமேதகு ஜனாதிபதியும், இலங்கை ஆயுத படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத்திற்கு … Read more

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனர்த்த நிலைமை நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட மன்னார் விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று முன்தினம் (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார். பிரதி அமைச்சர் ஜயசேகர, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் தற்போது நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்ததினால் இப்பிரதேசத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.அனர்த்ததினால் … Read more

மட்டக்களப்பில் தொடர்கிறது வெள்ள அனர்த்தம் :15,900 குடும்பங்கள் பாதிப்பு – அரசாங்க அதிபர் களத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்து சில இடங்களில் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றதுடன் மாவட்டத்தில் இதுவரை 15,900 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு இரண்டு இடைத்தங்கல் முகாம்களான ஆனைப்பந்தி மகா வித்தியாலயம் மற்றும் கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று (28) திகதி … Read more

அசாதாரண காலநிலை காரணமாக உயர் தரப்பரீட்சை மேலும் 03 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர் தரப்பரீட்சை மேலும் 03 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைகள் இடம்பெறமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார். பரீட்சைத் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல், முன்னர் வெளியிடப்பட்ட கால அட்டவணைக்கமையவே பரீட்சைகள் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் … Read more

புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து

ஊடக அறிக்கை புதிய சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji)  அவர்களின் வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள … Read more