விவசாயிகளுக்கான உர மானியம் நிச்சயம் வழங்கப்படும்

இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று (18) பாராளுமன்றத்தில் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். உர மானியம் தொடர்பாகக் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த போகத்தில் தீர்க்கப்படும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகளை அரசர்களாக்கும் யுகமொன்றை நிச்சயமாக … Read more

தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பதிரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2024 டிசம்பர் 11 அன்று கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

சுவிட்சர்லாந்தின் பிரதித் தூதுவர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு. ஒலிவியர் ப்ராஸ் அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார். முதலாம் படைத் தளபதியும் பதில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தூதுவரை மரியாதையுடன் வரவேற்றதுடன், சமூக உறவுகள் திட்டங்கள், இராணுவம் பாதுகாப்பு, மற்றும் பொது பணிகள் தொடர்பாக … Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கிழக்கு மாகாணக் கல்வித் துறையில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இராணுவம் CPSTL உடன் இணைந்து கெரவலப்பிட்டி எண்ணெய் சேமிப்பு முனையத்தில் தீயணைப்பு பயிற்சியை மேற்கொண்டது

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கெரவலப்பிட்டி பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இலங்கை இராணுவம் (SLA) மற்றும் இலங்கை பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் நிறுவனத்துடன் (CPSTL) இணைந்து தீயணைப்பு ஒத்திகை பயிற்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவசரகால சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்ககும் போது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவததை நோக்கமாகக் கொண்டு இப்பயிட்சி நடத்தப்பட்டதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனர்த்த முகாமைத்துவ நிலையம்- சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுக அதிகாரசபை, இலங்கை விமானப்படை, … Read more

முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு நாளை

ஊடக அமைச்சின் தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு 2024, நாளை (19) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. செயற்கை நுண்ணறிவு பற்றிய சொற்பொழிவு, இதழியலின் எதிர்காலப் போக்கில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் என்ன ? இலங்கை ஊடக கலாச்சாரத்தின் திசையில் அதன் சமகால போக்குகள் என்ன செய்கின்றன? என்பது  தொடர்பாக கல்வி ரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் கவனம் செலுத்தி, அறிஞர்கள் மற்றும் ஊடக … Read more

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை 

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள்,  ஆயுபோவன்,வணக்கம்,  நமஸ்தே, மாலை வணக்கம்,  ஜனாதிபதி அவர்களே, உங்கள் அன்பான கருத்துக்களை நான் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன்.  உங்கள் நாட்டில் எனது குழுவுக்கும் எனக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு உங்களுக்கும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது இந்திய நண்பர்களுக்கு இலங்கை மக்களின் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மாண்புமிகு ஜனாதிபதி … Read more

சுதேச மருத்துவத் துறையை பிரதான மூன்று விடயங்களின் கீழ் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டம்

சுதேச மருத்துவ துறையை பிரதான மூன்று பிரிவுகளின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், அந்தத் துறைகளின் பங்களிப்பாக சுற்றுலாக் கைத்தொழில் ஊடாக 8500 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இலக்கை எதிர்பார்ப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதாரத் துறை அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் சுதேச மருத்துவ அமைச்சின் செயற்பாடுகளை கண்காணிக்கும் விஜயமொன்றை மேற்கொண்ட போது அவ்வமைச்சின் அதிகாரிகள் உட்பட ஊழியர் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை … Read more

நாட்டின் நலனையும் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் முன்னுதாரணமான பாராளுமன்றம் இது – புதிய சபாநாயகர்

நாட்டின் நலன் மற்றும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முன்னுதாரணமிக்க பாராளுமன்றமாக இந்தப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். இன்று (17) தமது பாராளுமன்ற சபாநாயகராக பணிகளை ஆரம்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொதுமக்களின் நலன்களுக்காக அரசியலமைப்பின் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று உரையாற்றிய சபாநாயகர், கட்சி எதிர்க்கட்சி பேதங்கள் இனறி சகல உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதுடன்,அனைவரும் புரிந்துணர்வுடன் … Read more

புதிய சபாநாயகராக வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டார். புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்ததோடு, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.