சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்கங்கள் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த, 141 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிப்புக்குயள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் இடம்பெற்று வருவதாக, இந்த ஊடகவியலாளர் … Read more

அம்பாறைக்கு கண்காணிப்புக்காக சென்ற ஹெலிகாப்டர் மூலம் வாழைச்சேனையில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் விமானப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று (2024 நவம்பர் 27) ஏழாம் இலக்க பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் விமானம் அம்பாறை பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டது. இதன் போது வாழைச்சேனை, தொழுவிளச்சிய பிரதேசத்தில் அனர்த்தத்திற்கு உள்ளான நபர் ஒருவர் விமானப்படையினால் காப்பாற்றப்பட்டதுடன், அவ்விமானம் மூலம் மட்டக்களப்பு விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, ஒப்படைக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் முரண்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தன்னார்வ தொண்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் முரண்பாடு தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், தன்னார்வ தொண்டு கனிஷ்ட சேவையில் ஈடுபட்டுள்ள 300க்கும் அதிகமான தன்னார்வ ஊழியர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடம் முன்வைப்பதற்காக ஊழியர்களின் பிரதிநிதிகள் நேற்று (26) சுகாதார … Read more

நாட்டில் தற்போது நிலவுகின்ற பேரிடர் சூழ்நிலையில் பணிபுரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பணியிடங்களில் தொடர்ந்து இருக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் ஆலோசனையின் பேரில், அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். விடுமுறையில்; இருக்கும் உத்தியோகத்தர்களின் விடுமுறையை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மகாவலி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்களுக்கு, அவர்களின் பிரதேசங்களில் … Read more

எப்போதும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்

இந்த அனர்த்த இரண்டு நாட்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக செயல்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரிக்கை! இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலைப் பாங்கான பிரதேசங்களில் பயணம் செய்யும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்களை மிகவும் அவதான ஜிமாக செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் கோரிக்கை விடுத்துள்ளார். மலைப்பிரதேசங்களில் பயணிக்கும் போது வாகனங்களை வீதியின் ஓரத்திற்கு அவசியமின்றி … Read more

உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.

நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின சம்பள இடைவெளியை நீக்குதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் உலக வங்கியில் மாலைதீவு மற்றும் … Read more

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக

உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் வசதிகளை கவனத்தில் கொண்டு உரிய செயற்பாடுகளை மேற்கொள்க கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்களை பாதுகாப்பாக கரைசேர்க்க நடவடிக்கை எடுக்கவும் அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்  தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.  அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை … Read more

மட்டக்களப்பில் உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கில் உயிர் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை உலங்கு வானூர்தி மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் மாவடியோடை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு உலங்குவானுர்திகள் மற்றும் படகுகள் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடும்

தீர்மானம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் டிசம்பர் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் அண்மையில் (25) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கௌரவ ஜனாதிபதி … Read more

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஓமந்தை பொலிஸ் பிரிவு. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவிட்குற்பட்ட நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதன் அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளது. இவ் வீதியினூடாக இலகு ரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு கனாக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் ஓமந்தை பொலிஸ் பிரிவின் ஊடாக 09 வீதியை பயன்படுத்தும் பொது மக்களும், … Read more