இன்று  ஒருசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

2024 நவம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதி வடக்கு – வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று (நவம்பர் 27ஆம் திகதி) ஒருசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் … Read more

மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.   இத் தொகுதி வடக்கு – வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று (நவம்பர் 27ஆம் திகதி) ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  கடலில் பயணம் செய்வோரும் … Read more

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்த்துள்ளது. இதற்கான அனுமதி நேற்று (25.11.2024) நடைபெற்ற அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற வகையில் அபிவிருத்தியின் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கான வரவு செலவுத் திட்டமாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் … Read more

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்றிருந்தார். பாலின அடிப்படையிலான வன்முறைகளை(GBV) இல்லாமல் செய்தல் மற்றும் இலங்கைக்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கும் பொது … Read more

2024 நவம்பர் 27, 28, 29 ஆகிய தினங்களில் க.பொ.த. (உயர் தர) பரீட்சை நடைபெறமாட்டாது – பரீட்சைத் திணைக்களம் 

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை மேலும் தீவிரமடைந்து தென்மேல் வங்காள விரிகுடா பிரதேசத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கமானது 27.11.2024ஆம் திகதியளவில் சூறாவளியாக வளர்ச்சிடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலைமையுடன் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல், மத்திய மாகாணங்களில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த அசாதாரண காலநிலையுடன் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக 2024 க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு எதிர்கொள்ள … Read more

அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும்

2024 நவம்பர் 27 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி1100 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 170 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 240 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.  இத் தொகுதி வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு மிக அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் … Read more

வெளிநாட்டு  முதலீட்டு வாய்ப்புகளுக்காக  இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியது

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய அபிவிருத்தி  வங்கியின்  அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜீ.என்.ஆர்.டீ.அல்போன்ஸூ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வலுசக்தி,நவீன விவசாயம் மற்றும் காலநிலை அனர்த்த துறைகளில் காணப்படும் முதலீட்டு … Read more

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் – அமைச்சரவைப் பேச்சாளர்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.   அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்னரே இனங்காணப்பட்டதால், அப்பகுதிகளில் அமைந்துள்ள … Read more

முந்தாணை ஆற்றின் தாழ் நிலப் பகுதி தொடர்பான அறிவித்தல்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் அதிக மழை காரணமாக முந்தாணை ஆறு வழிந்தோடும் அம்பாறை மாவட்டத்தின் மஹா ஓயா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராவூர் பெற்று மற்றும் கோரலை பற்றி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள முந்தாணை ஆற்றை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையான காலப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. அதனால் அப்பிரதசத்தில் வாழும் … Read more

மக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் வேளையில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது – சபாநாயகர் பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பு

ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஊடாக பொதுமக்களின் அரசியல் முதிர்ச்சியைப் புரிந்து கொண்டு செயற்படும் பரந்த பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய திறந்த பாராளுமன்றம் என்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொதுமக்கள் பிரதிநிதிகள் ஊடாகப் பாராளுமன்றத்தை பொது மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் 162 பேர் புதிய உறுப்பினர்களாக இருப்பது விசேடமானது – பாராளுமன்ற … Read more