அதிக மழைவீழ்ச்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

நேற்று இரவு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பிரதேங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக அப்பிரதேசங்களின் ஊடாக வழிந்தோடும் பல ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஷ்வர தெரிவித்தார். தற்போது காணப்படும் அவசர வெள்ள நிலை தொடர்பாக இன்று காலை (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இந்த ஆறுகளின் பல பிரதேசங்கள் … Read more

மகாவலி ஆற்றுப்படுக்கையை அண்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

நேற்றிரவு முதல் மகாவலி ஆற்றை அண்மித்த சில பகுதிகளில் பெய்து வரும் கடும்மழை காரணமாக திம்புலாகலை, எச்சலம்டபட்டை, ஹிகுராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில், தமன்கடுவ, தம்பலக்காமம்; மற்றும்; வெலிகந்த செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரம் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்திலிருந்து … Read more

ஹெட ஓயா ஆற்றுப்படுக்கையை அண்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

நேற்றிரவு முதல் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹெட ஓயா ஆற்றுப்படுக்கையை அண்மித்த மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மற்றும் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்வான பகுதிகள் தற்போது முதல் அடுத்த 48 மணிநேரம் வரை. வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை : சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நவம்பர் 25ஆம் திகதி 2330 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 410 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதி வடமேற்குத் திசையில் … Read more

தொழில் சார் கல்வியை தெரிவு செய்யும் போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும்.- பிரதமர்

தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அவர்கள் 22 ஆம் திகதி நாரஹேன்பிட்டி நிபுணத்தா இல்லத்தில் உத்தயோகபூர்வமாக பணிகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வியானது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய விடயப் பரப்பாகும். கல்வி, உயர்கல்வி, … Read more

வட மாகாணத்தில் நாளை சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு 

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளநவம்பர் 26 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தொகுதி இன்று காலை 0830 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 600 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என … Read more

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர்  சன் ஹையன் (Sun Haiyan)  தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த அமோக வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்த சீன உப அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.   ஜனாதிபதி அநுரகுமார … Read more

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய தெங்கு உற்பத்தியாளர்களின் 60வது அமர்வு மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு 21 நாடுகளின் பங்குபற்றலுடன் கொழும்பில்

தேசிய தெங்கு உற்பத்தியாளர்களின் 60வது அமர்வு மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு 21 நாடுகளின் பங்குபற்றலுடன் கொழும்பில் ஆரம்பமானது. இம் மாநாடு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் பி. கே. பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட 21 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இலங்கை, பீஜி, இந்தியா, இந்தோனேஷியா, ஜமேக்கா, கென்யா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், கோட் … Read more

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல

– தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம்; நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. – பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் இணைந்து கொண்ட ஜனாதிபதி தெரிவிப்பு அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். … Read more