மட்டக்களப்பு களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பில் களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது. அனர்த்த காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளைநிலங்கள் தாழ்தல், கண்டல் தாவரங்களை நட்டு உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், மற்றும் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை குறைப்பதற்கும் களப்பில் சேர்கின்ற மண்ணை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம், மற்றும் களப்பு நிலங்களை சட்டவிரோதமாக மூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்,மேலும் பாதிப்பிற்குள்ளாகும் … Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் Sun Haiyan கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி; ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhon மற்றும் இலங்கையில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மகளிர்; மற்றும் சிறுவர்;; அலுவல்கள் அமைச்சர் சரோஜா … Read more

2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பம்

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு 333,185 பேர் தோற்றவுள்ளனர். இதற்கமைய, காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் செல்லுபடியான அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

செய்தி வெளியீடு எண். 78 ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 (4) (ஆ) பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைகழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 25.11.2024 இன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக இன்று முதல் மூத்த பேராசிரியர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. … Read more

கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவேர் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத் தொகுதி மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 500 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடியமற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்றிலிருந்து (நவம்பர் 25ஆம் … Read more

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர 

2024 உயர்தர பரீட்சை நவம்பர் 25 நாளை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆணையாளர் இதனை குறிப்பிட்டார்.  இப்பரீட்சை டிசம்பர் 22 ஆம் திகதி வரை 22 நாட்கள் இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக 333,185 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும், 79,795 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.  இவ்விண்ணப்ப … Read more

ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுஷ்டிப்பு

ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது. முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இரணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினால் இராணுவத்தினர் ஒத்துழைப்புடன் வருடாந்தம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்படுகிறது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை … Read more

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 24ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 23ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் … Read more

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில்

பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.