அஸ்வெசும நலன்புரிச் திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவிகளை பெறுவதற்கு, இதுவரை விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  அதன்படி, 2024 .11.25முதல் 2024.12.02ஆம் திகதி வரை அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் உரிய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  அதற்கான உரிய விண்ணப்பத்தை அந்தந்த பிரதேச செயலக அலுவலகத்தில் … Read more

மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 23ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 22ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக்கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் … Read more

சீன அரசாங்கத்தினால் 1996 வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்துணை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சீன அரசாங்கத்தினால் 552 மில்லியன் சீன யுவான் நிதி உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 1,888 வீடுகள் மற்றும் 108 கலைஞர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தின், துணை ஒப்பந்தத்தில் இன்று (22) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்தறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டது. பேலியகொடை, தெமடகொடை, மொரட்டுவ, மஹரகம ஆகிய பிரதேசங்களில் இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதுடன், கலைஞர்களுக்கான வீடமைப்புத் … Read more

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு  மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இன்று (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் … Read more

ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற  அர்ப்பணிப்போம்

-அரச சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது -புதிய மாற்றத்திற்கான விருப்பத்தின் காரணமாகவே அண்மைய தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்திற்கு சுமார் 80% ஆணையை வழங்கப்பட்டது -அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலமானது -மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை -பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச … Read more

ஜனாதிபதி செயலாளருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வீண் விரயம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் … Read more

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவிடம் வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டதாரியாவார். பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள … Read more

பாடசாலைகள் விடுமுறை தொடர்பான அறிவித்தல்..

2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் (இன்றுடன்) 2024 நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும். அதற்கமைய, நாளை (23) முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2024.12.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்பதுடன், டிசம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் விடுமுறை காலம் ஆரம்பமாகும். அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் … Read more

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என அனைத்து மாகாணங்களும் மக்களும் அதற்கு பங்களிப்பு செய்துள்ளன. இனவாதத்திற்கு இடமளிக்கப்படாது இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் … Read more

பண்டிகை காலத்திற்கு முன்னர் நாட்டரிசி சந்தைக்கு – வர்த்தக அமைச்சர்

சந்தையில் காணப்படும் அரிசியின் நிலைமை குறித்து குறுகிய காலத் தீர்வாக நாட்டரிசி 70,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அவ்வாறு இந்த அரிசி இறக்குமதிக்கு இலங்கை சதொச மற்றும் இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு … Read more