உர மானியம் குறித்து அச்சம் வேண்டாம் – கமநல அபிவிருத்தி ஆணையர் நாயகம்

உர மானியம் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும், விவசாயிகளின் வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் உர மானியம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான உர மானியம் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 22 மாவட்டங்களில் உள்ள ஒரு இலட்சத்து ஒன்பதாயிரம் விவசாயிகளுக்கு 1292 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதில், 19,900 விவசாயிகளைக் கொண்ட அம்பாறை … Read more

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.        

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்

கொரியாவில் பணிபுரியும் போது தமக்குக் கிடைக்க வேண்டிய காப்பீட்டு பலன்களைப் பெறாத   விண்ணப்பதாரர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான செய்தி பின்வருமாறு.      

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமட்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி … Read more

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும்

தேசிய மக்கள் சக்திக்கு வலுவான ஆணையை வழங்க ஆர்வமாக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி . இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் கிடையாது. தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் இலக்கை அடைய அனைத்து மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம்  இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அறைகூவல். அவர்களுக்கு இந்த சுதந்திரம் அவசியம் நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே … Read more

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 44(2)வது உறுப்புரையின் பிரகாரம் பின்வரும் அமைச்சர்கள் 2024 நவம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு:

பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தில் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோரிக்கை

நலன்புரிச் செலவினங்கள் குறித்து அவதானம் : சிறுவர் வறுமை, போசாக்குக் குறைபாடு மற்றும் விசேட தேவையுடையோருக்கு உதவி IMF திட்டத்தின் வெற்றி, தற்போதுள்ள ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவைநேற்று (18) பிற்பகல் … Read more

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு

21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் மற்றும் பொருளாதார அமைச்சு பிரதமரின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் … Read more

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

 பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெறுவதற்கு ஒன்லைன் முறைமை  பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில் தகவல் கருமபீடம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தலொன்றை வெளியிட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாராளுமன்ற இணையதளத்தின் (www.parliament.lk), முகப்பு … Read more

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் எதிர்வரும் 21ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் அவரது … Read more