புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் அச்சந்தர்ப்பத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம் திகதி அதிகாலை 05.30மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 … Read more

தேசிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 

2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. 1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க 2. கலாநிதி அனுர கருணாதிலக 3. பேராசிரியர் உபாலி பன்னிலகே 4. எரங்க உதேஷ் வீரரத்ன 5. அருண ஜயசேகர 6. கலாநிதி ஹர்ஷன சூரியபெரும 7. ஜனித ருவன் கொடித்துவக்கு 8. புண்ய ஶ்ரீ குமார ஜயகொடி 9. இராமலிங்கம் சந்திரசேகரன் 10. வைத்தியர் நஜீத் இந்திக 11. … Read more

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான பாராளுமன்ற ஆசனம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து சுகத் வசந்த டி சில்வாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் நாளை.. 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி,, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்கான சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்றைய  வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 17ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 16ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு  வெளியிடப்பட்டது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான … Read more

பாராளுமன்றத் தேர்தல் – 2024 : தேர்தல் ஆணைக்குழுவின் நன்றி

2024 நாடாளுமன்றத் தேர்தலை சரியான முறையில் நடத்தி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும், தேர்தல்கள் ஆணைக்குழு மீதான இலங்கை மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஆதரவளித்த அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள்

பாராளுமன்ற தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களினதும் விருப்பு வாக்குகளை என்னும் பணி நேற்று முடிவடைந்துள்ளது. அதில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சில வேட்பாளர்களின் பெயர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும்.. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய வேட்பாளர்களில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும், ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளையும், நளிந்த ஜயதிஸ்ஸ 371,640 வாக்குகளையும், நாமல் கருணாரத்ன 356,969 வாக்குகளையும், கே.டி.லால்காந்த 316,951 வாக்குகளையும் பெற்றனர்.   … Read more

2024 பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 2024.11.15 திகதி 2410/07 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை … Read more