கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று(14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. … Read more

உங்கள் பெறுமதியான வாக்கினை உரிய நேரத்தில் பயன்படுத்துங்கள் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (14) நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் குறித்த விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் சட்டமன்றத்திறந்கு 225 பிரதிநிதிகளை நியமிக்கும் மிக முக்கியமான தேர்தலான பொதுத்தேர்தல் நாட்டுக்கு முக்கியமானது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த நேரத்தில் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று உங்களது பெறுமதியான வாக்கினைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.. … Read more

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்கின்றது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் அமைதியின்மைக்குரிய சம்பவங்கள் எதுவும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார். தற்போது நடைபெற்றுவருகின்ற பொதுத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. குறிப்பாக மாலை வேளையில் சீரற்ற காலநிலை ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழையுடனான காலநிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில், அது குறித்து தேவையான அனைத்து … Read more

பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

2024 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பாக ஊடக வழிகாட்டிநெறியைப் பின்பற்றுமாறு அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடக நிருவாகத்தினருக்கு அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டார அறிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்வரை, உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றுவருகின்றன

இன்று (14) நாடு பூராகவும் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பானது மிகவும் சுமூகமான முறையில் இடம் பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் திகாமடுல்ல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம தற்சமயம் ஊடக சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். இன்று காலை 7.00 மணி முதல் 12.30 வரையிலான அம்பாறை மாவட்டத்தில் வாக்குப்பதிவுகளின் நிலவரப்படி 25% சதவீதமான வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். … Read more

கண்டியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன – கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன்

கண்டி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி தமது வாக்குகளை தாமதமின்றி உரிய நேரத்தில் பயன்படுத்துமாறும் கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் கேட்டுக்கொண்டார். இன்று காலை 07:00 மணிக்கு அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 04:00 மணிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, இம்முறை கண்டி மாவட்ட வாக்கெண்ணும் நிலையங்கள் பொல்கொல்லவில் அமைந்துள்ளதாக தெரிவித்த கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, வாக்குப் பெட்டிகள் … Read more

யாழ் மாவட்டத்தில் காலை 10.00 மணி வரை 16℅ வீதம் வாக்களிப்பு

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று(14) வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள்  சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில்  மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில்  காலை 10.00 மணிவரை 21.52 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை … Read more

இலங்கை விமானப்படை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை விமானப்படையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (AFESA) செயற்குழு பிரதிநிதிகள் இன்று (நவம்பர் 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சந்தித்தனர். AFESA சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்மோ பெரேரா (ஓய்வு) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் எயார் கொமடோர் அமல் விமலரத்ன (ஓய்வு), பிலைட் லெப்டினன்ட் சுசத் ராஜபக்ஷ (ஓய்வு) மற்றும் முன்னாள் வாரண்ட் அதிகாரி டி.எம். சரத் குமார ஆகியோர் அடங்குவர். பாதுகாப்புச் செயலாளர் … Read more

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை நிழற்படமெடுப்பதை / வீடியோ செய்வதை சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுவதைத் தடுத்தல்

தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல்/வீடியோ செய்தல் அல்லது சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுதல் என்பன தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே, அத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

2024ஆம் ஆண்டு பாராhளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் இன்று (13ஆம் திகதி) சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன் கருத்துக்களை வெளியிட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறான கருத்துக்களுக்கு எவ்வித விளம்பரமும் வழங்க வேண்டாம் என்பதுடன், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்குமாறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அனைத்து தரப்பினரையும் … Read more