ஜனாதிபதி செயலகத்தின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்லைக்கு நீர் சுத்திகரிப்பு அமைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் “தேசிய சிறுநீரக நோய் தடுப்பு” திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்ல கிராம சேவக பிரிவில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பு கடந்த 12ஆம் திகதி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நீர் சுத்திகரிப்பு அமைப்பை இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு நிறுவியதுடன் அதன் பராமரிப்புப் பணிகளை மகாகணுமுல்ல பினிபிந்து சமூக … Read more

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு .

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நிலையம் இன்று (16) ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையம் எனும் பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்கவின் இணைப்பதிகாரி உமர் ஹத்தாப் அப்துல்லாஹ் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி சிந்தக்க … Read more

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

*சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு* அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார். திருமதி சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டினர். இந்த கலந்துரையாடல் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் … Read more

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் அரச அதிகாரிகளின் திறனை முன்னேற்றுவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமான இடமுள்ளது … Read more

ஜனாதிபதி அவர்கள் இந்திய விஜயத்தின் போது ஊடகங்கள் முன்னிலையில் ஆற்றிய உரை

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே,மாண்புமிகு அமைச்சர்களே,கனவான்களே, கனவாட்டிகளே,ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே! ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே! இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய நாகரீக உறவுகளையும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்த … Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இந்திய சுகாதார அமைச்சரையும் சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிற்கு இந்திய உப ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார அமைச்சரும் பாரதீய ஜனதா … Read more

கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்

விசேட அறிவித்தல் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு … Read more

2024 ஆம் ஆண்டுக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப இறுதித் திகதி டிசம்பர் 31

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் ஆரம்பிக்டகப்பட்டுள்ளதுடன், அதன் இறுதித் திகதி 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்று, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுவது குறித்து பாடசாலை மட்டத்தில் அறிவுறுத்துவதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் … Read more

ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் தெளிவூட்டல்

ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தி முற்றிலும் பொய்யென்பதுடன் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தெளிவூட்டல் பின்வருமாறு:

இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

 இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும்  உத்தியோகபூர்வ   நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவுக்கு   இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால்  மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க … Read more