நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் … Read more

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00யின் பின்னர் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00யின் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேல், சப்ரகமுவ … Read more

வடக்கு,  வடமத்திய மாகாணங்களில்  இடியுடன் கூடிய மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வழிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ … Read more

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகம் – அமைச்சர் விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார். அதற்காக நூற்றுக்கும் … Read more

வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு

  வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வழகமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  … Read more

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகளை வழங்குவதற்கு தேவையான மொத்த துணிகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதற்கமைய, அடுத்த பாடசாலை … Read more

பொருளாதார நெருக்கடியில் உள்ள கிராமப்புற முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் யாத்திரைக்கான வாய்ப்பை வழங்கவும் – அமைச்சரவை பேச்சாளர்

மேல் மாகாணத்திற்கு அப்பால் வெளி மாகாணங்களில் வசிக்கும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கிராமப்புற முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு ஹஜ் கோட்டாவைப் பெற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு … Read more

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் குறித்து ஆராயப்படும்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசின் உதவியுடன் 1,996 வீடுகள்..

மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1,996 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சீன அரசு இணங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த 1,996 வீடுகளும், மூன்று கட்டங்களாக பல இடங்களில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொரட்டுவயில் 575 , கொட்டாவயில் 108, தெமட்டகொடயில் 586, மஹரகமவில் … Read more