டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய..

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தின் அடிப்படை படியாக, கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் … Read more

மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி –  அச்சுவேலி பிரதான வீதி  இன்று முதல் பொதுமக்கள் பாவனைக்கு..

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி … Read more

UNFPA பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை..

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் … Read more

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம். அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. … Read more

கௌரவ அமைச்சர் விஜித ஹேரத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி 

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ஆன்மீகத்தில் அறியாமை என்னும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது தர்மத்தை நிறுத்துவதும்,தீபாவளியின் பிராதன நோக்கமாகும். நரகாசூரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்து சகோதர, சகோதரிகள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீமைக்கு எதிராக நன்மையும், அறியாமைக்கு எதிராக அறிவையும் நிலைநாட்டப்பட்ட நாளாக, தெய்வீக ஒளியைப் போற்றிக் கொண்டாடும் தீபத்திரு நாளாக, தமிழ் மக்கள் இவ்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவதாக … Read more

இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

இத்தாலிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் அவர்கள் நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மீள உறுதிப்படுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் இத்தாலியில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக பயிற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியுமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை … Read more

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர … Read more

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை … Read more