ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை   ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. … Read more

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் உப செயலாளர் கொஸ்வத்தவினால் இன்று (30) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.  பொப்பி மலர் விற்பனையில் கிடைக்கப்பெறும் வருமானம் ஓய்வுப்பெற்ற மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ அதிகாரிகளின் நலன்களுக்கென ஒதுக்கப்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களின் போதும், … Read more

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணி அளவில் ஆரம்பமானது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் (1) மற்றும் (04)ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை … Read more

பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த நடவடிக்கை

மின் கட்டணத்தை குறைக்க புதிய வேலைத்திட்டம் -இலங்கை வணிகச் சபை பிரிதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு எந்தவொரு கொடுப்பனவு மற்றும் சம்பளத்தையும் பெறாமல் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவத் தயாரென வணிகச் சபை பிரதிநிதிகள் தெரிவிப்பு எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் … Read more

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் இதற்கு ஏற்றுமதியாளர்களின் முழுமையான பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயரதிகாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஏற்றுமதி வர்த்தகத்தை இலகுபடுத்துவதற்காக ஏனைய அரச நிறுவனங்களையும் இலங்கை சுங்கத்தையும் … Read more

இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் நாணய அச்சிடல் பற்றிய விளக்கம்

இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒக்டோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித் தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமை செய்வதை நோக்காகக் கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். … Read more

2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய  விபரங்களுடன் கூடிய பதிலளித்துள்ள விலைமனுதாரரான  M/s OQ Trading Limited  இற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைவகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கே நேற்று முன்தினம் (28.10.2024) நடைபெற்ற  அமைச்சரவையில் இவ்வாறு  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025ஆம் ஆண்டுக்கான … Read more

தீபாவளி பண்டிகைக்கான முற்பணக் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரச தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படும் பண்டிகை முற்பணக் கொடுப்பனவை 10,000 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரச பெருந்தோட்டக் கம்பனிகள் (SPC), எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி மற்றும் பொதுமக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டக் கம்பனிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தக்; கொடுப்பனவு … Read more

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட இரு தரப்பையும் பாதுகாப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும் – இலங்கை வங்கிச் சங்கத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி 

அனைத்து மக்களும் பாதுகாக்கப்படும் வகையில் நாட்டின் முறையற்ற பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை இலங்கையை விரைவில் டிஜிட்டல் மயமாக்கவும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் திட்டம் நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய … Read more

'நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

‘நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று 2024 ஒக்டோபர் 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. நூலகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் பங்கேற்ற இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்.. ‘நீங்கள் வெறும் நூலகர்கள் மாத்திரம் அல்ல, மாறாக அறிவு சொத்தின் பாதுகாவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்பதுடன் எமது டிஜிட்டல்மயப்படுத்தும் … Read more