ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சரவைப் பேச்சாளர்

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5000 ரூபாய் கொடுப்பனவையும் எதிர்வரும் ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு … Read more

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரியவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தெளிவூட்டல் கலந்துரையாடல் நடைபெற்ற கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  தலைமையில் மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (29) நடைபெற்றது.  நாளைய தினம் (30)  ம மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும்  மாவட்டத்தின் பொலிஸ் … Read more

நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை என்றும், எந்தவொரு நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ எந்த வகையிலும் கடன்கள் பெறப்படவில்லை என்றும் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரும், புத்த சாசனம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் … Read more

2024 ஆசியக் கோப்பை நெட்பால் போட்டியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தேசிய வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்துகள்

2024 ஆசியக் கோப்பை நெட்பால் போட்டியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது தேசிய வலைப்பந்து அணிக்கு  வாழ்த்துகள்நீங்கள் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு கடுமையாக போராடியுள்ளீர்கள். ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று இலங்கையர்களாகிய நீங்கள் எமக்கு பெருமை சேர்த்தமைக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

வடக்கு புகையிரதப் பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன –  புகையிரத திணைக்களம்

மஹவ – ஓமந்தைக்கு இடையிலான புகையிரத இயக்கமானது பாதுகாப்பற்றது என சில தொழிற்சங்கங்களினால் அவ்வப்போது கூறப்பட்டு வந்தாலும், திணைக்களத்தினால் புகையிரத இயக்கங்களின் போது புகையிரத பயணிகளினதும் குறுக்கு பாதைகளின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதன் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று புகையிரத திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..

ஜனாதிபதி ஊடக விருதுகள் 2024 – விண்ணப்ப கால எல்லை நீடிப்பு..

2024 ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நவம்பர் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் சிறந்ததொரு ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊடகவியலாளர்களின் பணியை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சினால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் ஜனாதிபதி ஊடக விருதுக்கான … Read more

பெரும்போக நெற் செய்கை  நடவடிக்கைகளுக்காக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர நீர் வயலுக்கு விடப்பட்டது

2024 பெரும்போக நெற் செய்கைக்காக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர நீரை விநியோக நிகழ்வு (25) சமய அனுஷ்டான ஆசீர்வாதங்களுடன் இடம்பெற்றது. அதற்கிணங்க இம்முறை பெரும்போகத்தில் 25,100 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுவதாக பராக்கிரம சமுத்திரத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன அபேசிங்க தெரிவித்தார். இந்நிகழ்வில் பொலன்னறுவை  மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க வின் தலைமையில் சமுத்திர வாயில் திறக்கப்பட்டு, கால்வாயில் பிரதான நுழைவாயில் ஊடாக வயல்களுக்கு நீர் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பராக்கிரம சமுத்திர நெல் விவசாய … Read more

பாராளுமன்றத் தேர்தல் 2024 : அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதலும் அதற்குரிய செல்லுபடியான அடையாள அட்டைகளும்

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் அதற்குரிய செல்லுபடியான அடையாள அட்டைகள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port city colombo private limited )   முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங்(xiong Hongfeng) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக … Read more

வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

புனரமைப்புப் பணிகள் காரணமாக சுமார் 10 மாதங்களாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து காங்கசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் இன்று (28) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்தேவி புகையிரதம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வடக்குப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 68 கிலோமீட்டர் நீளமுள்ள மஹவ – அநுராதபுரம் புகையிரத பாதை 119 ஆண்டுகளுக்குப் பிறகு (1905க்குப் … Read more