தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான முறையான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுதினார்

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கொள்முதல் சட்டம் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் … Read more

சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான தேர்தல் கடமை தொடர்பான செயலமர்வு

பாராளுமன்றத் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) இடம் பெற்றது.   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற, சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான இச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (28)  இடம் பெற்றது. சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் … Read more

யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான  கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான  கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்று  (27) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.  06 பாராளுமன்ற … Read more

பாதுகாப்பு தலைமையக வளாகத் திட்ட கட்டுமானப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வை 

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான  கண்காணிப்பு வியமொன்றினை நேற்று முன்தினம்  (26) மேற்கொண்டார்.  குறித்த திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கட்டுமானப் பகுதிகளை பார்வையிட்டார்.  திட்டத்தின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பத்திரகே, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து செயலாளருக்கு இதன்போது விளக்கமளித்தார். நிர்மாணப்பணிகளை விரைவு படுத்துவதற்கு அவசியமான அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட … Read more

இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்.

தற்போது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வரும் 13வது ஆசியக் கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி அரையிறுதியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த விளையாட்டுத் திறமைக்கு சான்றாகும். இன்று, நமது தேசிய சாம்பியன்கள் இறுதிப் போட்டியை எதிர்கொள்வார்கள், கடந்த முறை இலங்கைக்கு ஆசியக் கோப்பையைக் வென்று கொடுத்த எங்கள் திறமையான அணிக்கு, … Read more

ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணிக்கு வெற்றிக் கிண்ணம்

ஓமன், அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற ஆசியாவில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 கிண்ண இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது.  இலங்கை அணி சார்பாக Sahan Arachchige ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றார்.  … Read more

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் … Read more

நாடளாவிய ரீதியாக பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்..

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான உதயத்துடன் மக்களை மையமாகக் கொண்ட வலுசக்தித் துறையாக வளர்ச்சியடையும் வலுசக்தி அமைச்சின் நெறிப்படுத்தலில், இந்திய அரசின் 17 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையும் இணைந்து நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களை உள்ளடக்கியவாறு கூரையின் மீது நிர்மாணிக்கப்படும் இலவச சூரிய மின்கலத் தொகுதிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் விகாரைகள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் … Read more

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன் துறை வரை பயணிக்கும் புகையிரத சேவை நாளை (28) முதல் மீண்டும் ஆரம்பம்

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை நாளை 2024.10.28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என். ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மி.மீ  அளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி … Read more